Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

"டெல்லி போராட்டம் தொடர்பான வதந்திக்கு பின்னால் பாக்.,"

"டெல்லி போராட்டம் தொடர்பான வதந்திக்கு பின்னால் பாக்.,"

தவறான தகவல்களை பரப்பிய சமூக வலைதளக் கணக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

டெல்லி போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய சமூக வலைதளக் கணக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை துணை ஆணையர் சஞ்சய் பாட்டியா தெரிவித்துள்ளார்.


தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இண்டியா கூட்டணியினர் பேரணி, முற்றுகை போராட்டத்தை டெல்லியில் நடத்தினர்.

போராட்டங்களுக்கு மத்தியில் போலீசாரை விமர்சித்தும், சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. போலீஸ் அதிகாரி ஒருவர், பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்ததாக வீடியோ ஒன்று வெளியாகியது. இதை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் காவல் துறையையும், மத்திய அரசையும் விமர்சித்தன. ஆனால், அந்த வீடியோ ஏ.ஐ. வாயிலாக உருவாக்கப்பட்ட போலி என கண்டறியப்பட்டது.


 அதை உருவாக்கியவர் கைது செய்யப்பட்டார். அந்த வகையில் சுமார் 300 போலி மற்றும் தவறான தகவல்களை பரப்பிய பதிவுகளை போலீசார் நீக்கினர். போலியான காணொளிகள், பதற்றத்தை உருவாக்கும் வகையிலான தகவல்களை வெளியிடும் உள்ளடக்கங்களை கண்டறியும் முயற்சியிலும் காவல் துறையினர் இறங்கினர்.

இதுகுறித்து டெல்லி காவல் துறை துணை ஆணையர் சஞ்சய் பாட்டியா கூறுகையில், "டெல்லியில் நடந்த போராட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளின் உண்மைத்தன்மையை கண்காணித்து வருகிறோம். ஒரு பதிவு தவறானது. பொய்யான தகவலை பரப்புகிறது என கண்டறிந்தால் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம்.

 அத்தகைய ஒரு குறிப்பிட்ட கணக்கின் பதிவு விவரங்களை ஆய்வு செய்தபோது அது பாகிஸ்தானைச் சேர்ந்தது என தெரிந்தது. அதுகுறித்து விசாரித்து வருகிறோம். அந்த கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பதற்றத்தைத் தூண்டுவதற்கான முயற்சியாகும். அந்த பதிவை நீக்குவதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது" என்றார்.

முந்தைய செய்தி
IDBI வங்கியின் 60.72 சதவீத பங்குகளை விற்க அரசு ஒப்புதல்
அடுத்த செய்தி
ரோலர் கோஸ்டரிலிருந்து தூக்கி வீசப்பட்ட நபர் - நடுங்கவைக்கும் சம்பவம்

தொடர்புடைய செய்திகள்