Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதானி விண்ட் நிறுவனத்துக்கு 696 மெகாவாட் ஆர்டர்கள்

அதானி விண்ட் நிறுவனத்துக்கு 696 மெகாவாட் ஆர்டர்கள்

அதானி குழுமத்துக்கு வெளியே உள்ள நிறுவனங்களிடமிருந்து பெற்ற மொத்த ஆர்டர்களின் அளவு 1,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான அதானி விண்ட், ஐந்து மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 696.2 மெகாவாட் திறன் கொண்ட இயந்திரங்களை வழங்குவதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இதன்மூலம், அதானி குழுமத்துக்கு வெளியே உள்ள நிறுவனங்களிடமிருந்து பெற்ற மொத்த ஆர்டர்களின் அளவு 1,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது.

ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் புர்வா கிரீன் பவர் நிறுவனம் 300 மெகாவாட், ஜிண்டால் இந்தியா பவர் நிறுவனம் 155 மெகாவாட், என்டிபிசி ரினியூவபிள் எனர்ஜி நிறுவனம் 109.2 மெகாவாட், ஆதித்யா பிர்லா ரினியூவபிள்ஸ் நிறுவனம் 82.5 மெகாவாட், இன்டிக்ரம் எனர்ஜி நிறுவனம் 49.5 மெகாவாட் திறன் கொண்ட இயந்திரங்களுக்கு ஆர்டர் வழங்கியுள்ளன.

இந்த இயந்திரங்கள் கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நிறுவப்பட உள்ளன. கர்நாடகத்தின் பெல்லாரியில் புர்வா கிரீன் பவர் நிறுவனத்துக்காக தலா 5 மெகாவாட் திறன் கொண்ட 60 இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. குஜராத்தின் கவ்தா பகுதியில் உள்ள திட்டத்துக்காக என்டிபிசி நிறுவனம் தலா 5.2 மெகாவாட் திறன் கொண்ட 21 இயந்திரங்களை வாங்குகிறது.

குஜராத்தின் முந்த்ராவில் உள்ள ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறனை 2.25 ஜிகாவாட்டிலிருந்து 5 ஜிகாவாட்டாக உயர்த்த அதானி விண்ட் திட்டமிட்டுள்ளது. நீண்டகாலத்தில் இதனை 10 ஜிகாவாட்டாக அதிகரிப்பதும் நிறுவனத்தின் இலக்காகும். இதன்மூலம் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், வெளிநாட்டுச் சந்தைகளிலும் வணிகத்தை விரிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திறன் 59.2 ஜிகாவாட்டாக உள்ளது. மேலும், 43 ஜிகாவாட் திறன் கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2026-ம் நிதியாண்டில் மட்டும் 6.05 ஜிகாவாட் புதிய காற்றாலை மின் உற்பத்தித் திறன் நிறுவப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஸ்டார்லிங்க் சேவை: ஜெலென்ஸ்கி
அடுத்த செய்தி
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் Q2 நிகர லாபம் 3 மடங்கு உயர்வு

தொடர்புடைய செய்திகள்