Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இரட்டை நிலைப்பாடு கூடாது: ஐ.நா.வுக்கு இந்தியா எச்சரிக்கை

இரட்டை நிலைப்பாடு கூடாது: ஐ.நா.வுக்கு இந்தியா எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்குள்ள மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு பன்முகத்தன்மையை சிதைக்கும் என்று இந்திய தூதரக செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் 3-வது குழுக் கூட்டத்தில், இந்தியாவின் நிரந்தர தூதரக முதல் செயலர் அனுஜ் ஸ்வரூப் பங்கேற்றார். அவர் பேசியதாவது: 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கைபர் பக்துன்க்வா பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்ய வேண்டும். 

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்குள்ள மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் போராட்டங்களை இந்தியா சரியான முறையில்தான் கையாள்கிறது. அங்கு எந்த மனித உரிமை மீறல்களும் நடக்கவில்லை.

மேற்கத்திய நாடுகளில் போராட்டங்கள் ஒடுக்கப்படும்போது மவுனம் காக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம், இந்தியா போன்ற நாடுகளின் விவகாரத்தில் மட்டும் தலையிடுவது ஏன்? 

இந்த இரட்டை நிலைப்பாடுகள் சர்வதேச பன்முகத்தன்மையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும். இதுபோன்ற போக்கை ஐ.நா. சபை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
ஏஐ தொழில்நுட்பத்தில் ரூ.17 லட்சம் கோடி முதலீடு
அடுத்த செய்தி
4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் சிதைவுகள் - எங்கு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்