Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்குகிறார்கள்: பியூஷ் கோயல்

இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்குகிறார்கள்: பியூஷ் கோயல்

இந்தியாவைவிட அதிக பொருளாதார வளம் கொண்ட நாடுகளுடன் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்குகிறார்கள் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். டெல்லியில் நநட்த இந்திய தொழில் துறை தொடர்பான மாநாட்டில் அவர் பேசியதாவது:

அமெரிக்கா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படவில்லை. அந்த ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் வெளியானதும், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கொண்டாடுவார்கள்.

இந்தியா இதுவரை செய்த 8 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றில்கூட சிறு குறையை கண்டுபிடிக்கும் நபரை நான் சந்தித்தது இல்லை. ஒன்பதாவது ஒப்பந்தமாக அமெரிக்கா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சிலர் அரசியலாக்க முயல்கின்றனர். புரிதல் இல்லாமை அல்லது அறிவு இல்லாமையின் காரணமாக விமர்சிக்கலாம். ஒப்பந்தம் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. அவர்கள் எதை விமர்சிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

இந்தியாவைவிட அதிக பொருளாதார வளம் கொண்ட நாடுகளுடன் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும். அந்த நாடுகளைப் போட்டியாளர்களாகக் கருதாமல், இந்தியாவின் வளர்ச்சிக்குத் துணையாகப் பார்க்க வேண்டும்.

அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரியைக் குறைத்தால், உள்நாட்டுச் சந்தையில் போட்டி அதிகரித்து, இந்திய விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. மக்காச்சோளம், ஆப்பிள், பாதாம், வால்நட் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி விலை குறைந்தால், உள்நாட்டுப் பொருட்களின் விலையிலும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதுபோன்ற விவகாரங்களில் தீர்வுகாண மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேநேரத்தில், அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்தால், நமது விவசாயிகள், வியாபாரிகளுக்குப் பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
Spain mourns deadly train crash
அடுத்த செய்தி
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு மாற்ற முடிவு

தொடர்புடைய செய்திகள்