Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சர்வதேச சந்தையில் கால்பதிக்கும் இந்திய வாசனை திரவியங்கள்

சர்வதேச சந்தையில் கால்பதிக்கும் இந்திய வாசனை திரவியங்கள்

மெமோ பாரிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள 'மதுரை' என்ற வாசனைத் திரவியத்தில் மல்லிகை, மஞ்சள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

உலகின் முன்னணி வாசனைத் திரவிய நிறுவனங்களுக்குத் தேவையான மல்லிகை, ரோஜா, சந்தனம் உள்ளிட்ட விலைமதிப்புமிக்க மூலப்பொருள்கள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. இந்நிலையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆடம்பர வாசனைத் திரவிய பிராண்டுகளை உருவாக்குதற்கான முயற்சிகள் இந்தியாவில் தொடங்கியுள்ளன.

உலக வாசனைத் திரவியத் தயாரிப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. மல்லிகை, சம்பங்கி, ரோஜா, சந்தனம் உள்ளிட்ட மூலப் பொருள்களை உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு இந்தியா வழங்கி வருகிறது. டிஎஸ்எம்-ஃபிர்மெனிச் நிறுவனத்தின் தகவலின்படி, உலகளாவிய ஜாஸ்மின் சம்பாக் செறிவூட்டப்பட்ட பூச்சாறு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. டியோர், குர்லைன் போன்ற நிறுவனங்கள் மதுரையில் இருந்து பெறப்படும் மல்லிகைச் சாற்றைப் பயன்படுத்தி வருகின்றன.

மெமோ பாரிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள 'மதுரை' என்ற வாசனைத் திரவியத்தில் மல்லிகை, மஞ்சள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மதுரையின் பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் சர்வதேச வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்புகள் இருந்தும், உலகளவில் புகழ்பெற்ற இந்திய வாசனைத் திரவிய பிராண்டுகள் உருவாகவில்லை. 

இதுகுறித்து மதுரை மல்லி ஃபிராக்ரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விசாலாட்சி கண்ணன் கூறுகையில், "மூலப்பொருள்களை வழங்குவதில் இந்தியா முன்னேறியிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி அதிக மதிப்புள்ள பிராண்டுகளை உருவாக்குவதில் மேற்கத்திய நாடுகளே முன்னிலையில் உள்ளன" என்றார். மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்தாலும், அதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பது உறுதி செய்யப்படாத நிலை உள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து சர்வதேச ஆடம்பர வாசனைத் திரவிய பிராண்டை உருவாக்கும் முயற்சியில் சென்னையைச் சேர்ந்த சஸ்வா (Sasva) நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் 2022-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில் கிடைக்கும் இயற்கை மூலப்பொருள்களைப் பயன்படுத்தி வாசனைத் திரவியங்களைத் தயாரித்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் பாட்டில்களை விற்பனை செய்து வரும் சஸ்வா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா மற்றும் தென் அமெரிக்கச் சந்தைகளில் அதிக விற்பனையைப் பெற்று வருகிறது.

இந்தியாவை விட ஐரோப்பிய விற்பனையாளர்கள் தங்களது பிராண்டை அதிகம் வரவேற்றதாகக் கூறும் சாஸ்வா நிறுவன நிர்வாகி ஸ்ரீமன் சுப்பிரமணியன், மேற்கத்திய நாடுகள் இந்தியாவில் உருவான ஒரு பிராண்டை ஏற்றுக்கொண்ட பிறகே இந்தியர்களும் அதற்கு அதிக மதிப்பளிக்கத் தொடங்குகின்றனர் என்கிறார்.

உலக வாசனைத் திரவியச் சந்தையில் இதுவரை இந்தியாவின் பங்களிப்பு மூலப்பொருள்களை வழங்குவதுடன் பெரும்பாலும் முடங்கியுள்ளது. இந்த நிலையை மாற்றி, சர்வதேசச் சந்தையில் இந்திய வாசனைத் திரவியங்கள் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.4,500 கோடி உள்நாட்டு சந்தை

இந்தியாவில் வாசனைத் திரவியங்களுக்கான உள்நாட்டுச் சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது. டாடா குழுமத்தின் ஸ்கின் (Skinn) பிராண்டின் உள்மதிப்பீட்டின்படி, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட வாசனைத் திரவியச் சந்தையின் மதிப்பு சுமார் ரூ.4,500 கோடி. ஆண்டுக்கு 13 முதல் 15 சதவீதம் வரை இந்தச் சந்தை வளர்ச்சி அடைந்து வருகிறது.
100 மி.லி. அளவுள்ள ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையிலான வாசனைத் திரவியங்கள் மொத்த விற்பனை மதிப்பில் 55 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.

முந்தைய செய்தி
New AI research centre inaugurated at CIT
அடுத்த செய்தி
மத்திய அரசு வரிப் பகிர்வு - தமிழகத்துக்கு ரூ.4,466 கோடி ஒதுக்கீடு

தொடர்புடைய செய்திகள்