Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பாரத் டெக்ஸ் வர்த்தக கூட்டமைப்பு தலைவராக சக்திவேல் தேர்வு

பாரத் டெக்ஸ் வர்த்தக கூட்டமைப்பு தலைவராக சக்திவேல் தேர்வு

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் கூட்டமைப்பின் 12-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆ.சக்திவேல் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பகிரவும் WhatsApp Facebook

பாரத் டெக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பின் (BTTF) புதிய தலைவராக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் (AEPC) தலைவர் ஆ.சக்திவேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் கூட்டமைப்பின் 12-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆ.சக்திவேல் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் நரேன் கோயங்கா வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியை மேம்படுத்துதல், சர்வதேச சந்தைகளில் இந்திய ஜவுளிப் பொருட்களுக்கான அங்கீகாரத்தை அதிகரித்தல், தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் புதிய தலைமை கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை உலகின் முன்னணி ஜவுளி உற்பத்தி மற்றும் கொள்முதல் மையமாக உருவாக்குதல், புதிய சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல், புதுமைகளை ஊக்குவித்தல், சர்வதேச வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவையும் முக்கிய நோக்கங்களாக இருக்கும்.

இதுகுறித்து ஆ.சக்திவேல் கூறியதாவது: 

இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரத் டெக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துதல், ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கொள்முதலாளர்களுடனான தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவை எங்களின் முக்கிய நோக்கங்களாகும்.

அடுத்த ஆண்டு மார்ச் 31 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள பாரத் டெக்ஸ் 2027 சர்வதேச ஜவுளிக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்த தீர்மானித்துள்ளோம். இந்தக் கண்காட்சி, இந்தியாவின் ஜவுளி உற்பத்தித் திறனையும் சிறப்பம்சங்களையும் உலகுக்கு எடுத்துரைப்பதுடன், பயனுள்ள வர்த்தகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும், உலகின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடை மையமாக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தவும் உதவும்.

‘ஃபைபர் முதல் ஃபேஷன் வரை’ என்ற முழுமையான உற்பத்திச் சங்கிலியை உலகிற்கு எடுத்துக்காட்டும் தளமாக இக்கண்காட்சி அமையும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ‘பண்ணை முதல் நார் வரை, நார் முதல் தொழிற்சாலை வரை, தொழிற்சாலை முதல் ஃபேஷன் வரை, ஃபேஷன் முதல் வெளிநாட்டுச் சந்தைகள் வரை’ (5F) என்ற கருத்தாக்கத்தைச் சர்வதேச ஜவுளித் தளத்தில் முன்னெடுத்துச் செல்லும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), அமெரிக்காவுடன் எதிர்பார்க்கப்படும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) ஆகியவை இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்குப் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என நம்புகிறோம். இத்தகைய வர்த்தக முன்னேற்றங்கள் இந்தியாவின் சர்வதேசப் போட்டித் திறனை அதிகரித்து, ஏற்றுமதி வளர்ச்சிக்கும் பங்களிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Innovation, startups key to refining sector: HPCL CMD
அடுத்த செய்தி
India, Liechtenstein talks on double taxation

தொடர்புடைய செய்திகள்