Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டீமேட் 2.0 மூலம் டோக்கன் வடிவில் நிறுவனப் பத்திர வர்த்தகம்

டீமேட் 2.0 மூலம் டோக்கன் வடிவில் நிறுவனப் பத்திர வர்த்தகம்

டீமேட் 2.0 திட்டத்தின் அடுத்த கட்டத்தில், டோக்கன் வடிவிலான நிறுவனப் பத்திரங்கள் இரண்டாம் நிலைச் சந்தையில் வர்த்தகமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

டீமேட் 2.0 திட்டத்தின் அடுத்த கட்டத்தில், டோக்கன் வடிவிலான நிறுவனப் பத்திரங்கள் இரண்டாம் நிலைச் சந்தையில் வர்த்தகமாகும் என செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்தார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற 16-வது ஏஎன்எம்ஐ சர்வதேச மூலதனச் சந்தை மாநாட்டில் அவர் பேசியதாவது:

டீமேட் 2.0 திட்டத்தின் அடுத்த கட்டத்தில், டோக்கன் வடிவிலான நிறுவனப் பத்திரங்கள் இரண்டாம் நிலைச் சந்தையில் வர்த்தகமாகும். இதனால் பணப்புழக்கம் மேம்படும்; பரிவர்த்தனைத் தீர்வு இடர் குறையும். நிதியை விரைவாகப் பெற முடியும்.

நிறுவனப் பத்திரங்களின் இரண்டாம் நிலை வர்த்தகத்தை ஊக்குவிக்க, சந்தை உருவாக்கக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.

பங்குத் தரகர்களின் செயல்பாட்டு அளவு, வாடிக்கையாளர் சார்ந்த இடர், தொழில்நுட்பச் சார்பு ஆகியவற்றுக்கு ஏற்ப படிநிலை இணக்கக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பாதுகாப்பாகச் சோதிக்க, கட்டுப்படுத்தப்பட்ட சோதனைச் சூழலை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கிறோம். இதன்மூலம் புதுமையாளர்களுக்கு ஒழுங்குமுறைத் தெளிவும், எங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் கிடைக்கும்.

இணையப் பாதுகாப்பைத் தகவல் தொழில்நுட்பச் செலவாகக் கருதாமல், வணிக முன்னுரிமையாக அணுக வேண்டும். உங்கள் அமைப்புகளைச் சோதியுங்கள்; செயலிழப்புகளை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள்.

எளிய விதிகள், ஆழமான சந்தைகள், பொறுப்பான தொழில்நுட்பம், பரவலான அணுகல் ஆகிய நான்கும் எங்கள் செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இணக்க நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், மோசடிக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தவும் வைப்பகப் பங்கேற்பாளர்களுக்கான விதிகளை மறுசீரமைத்து வருகிறோம்.

பணப் புழக்கத்தையும், விலை கண்டறிதலையும் மேம்படுத்த, குறுகிய விற்பனை மற்றும் பத்திரங்களைக் கடனளித்தல், கடன்பெறுதல் நடைமுறைகளை மறுஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
அமெரிக்கா புறப்பட்ட ரஷ்ய கப்பல்கள்; ஜெலன்ஸ்கி அதிருப்தி!
அடுத்த செய்தி
அவதூத் சாத்தே அகாடமி ரூ.546 கோடியை திருப்பித்தர செபி உத்தரவு

தொடர்புடைய செய்திகள்