Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாடா குழும நிகழ்வுகளைக் கண்காணிக்கிறோம்: செபி தலைவர்

டாடா குழும நிகழ்வுகளைக் கண்காணிக்கிறோம்: செபி தலைவர்

குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பட்டியல் கடமைகள் மற்றும் தகவல் வெளியீட்டுத் தேவைகள் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸில் நிர்வாகம் தொடர்பாக எழுந்துள்ள விவகாரங்களைக் கண்காணித்து வருவதாக இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்தார்.

டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரனை மீண்டும் நியமிப்பது, நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பாரத் வர்த்தக சபை முதலீட்டாளர் மன்றத் தொடக்க நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

டாடா சன்ஸ் பட்டியலிடப்பட்ட நிறுவனம் அல்ல. அதன் நிர்வாக நிலையில் சில விவகாரங்கள் உள்ளன. அதேநேரம், குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பட்டியல் கடமைகள் மற்றும் தகவல் வெளியீட்டுத் தேவைகள் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அந்த நிறுவனங்களும் அவற்றின் நிறுவனர்களும் செபியின் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள். அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது, என்றார்.

எனினும், குறிப்பிட்ட நிர்வாக விதிமீறலையோ, குழுமத்துக்கு எதிரான ஒழுங்குமுறை நடவடிக்கையையோ அவர் குறிப்பிடவில்லை.

டாடா குழுமத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 26 நிறுவனங்கள் உள்ளன. 2025 மார்ச் இறுதியில் அவற்றின் மொத்த சந்தை மதிப்பு 32,800 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.
இன்கவர்ன் ஆய்வின்படி, ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் டாடா சன்ஸில் மொத்தம் சுமார் 11.92 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளன. அவற்றில் 1.77 கோடிக்கும் அதிகமான பங்குதாரர் அல்லது ஃபோலியோ கணக்குகள் உள்ளன.

டாடா சன்ஸில் டாடா அறக்கட்டளைகள் சுமார் 66 சதவீதமும், ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் சுமார் 18.4 சதவீதமும் பங்குகளை வைத்துள்ளன

முந்தைய செய்தி
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,480 குறைந்தது
அடுத்த செய்தி
பருத்தி இறக்குமதி வரி விலக்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

தொடர்புடைய செய்திகள்