Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தடையற்ற எண்ணெய் விநியோகம் - ரிலையன்ஸை நாடும் அமெரிக்கா

தடையற்ற எண்ணெய் விநியோகம் - ரிலையன்ஸை நாடும் அமெரிக்கா

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

தடையற்ற எண்ணெய் விநியோகத்துக்காக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா தனது குழுவினருடன் இந்தியாவில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குஜராத்தின் ஜாம்நகருக்கு சென்ற அவர், அங்கு ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகம், புதிய பசுமை எரிசக்தி ஆலைகள் மற்றும் தரவு மையங்களை பார்வையிட்டார்.


இந்தியாவை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் ஒரு சர்வதேச வல்லரசு என்று பாராட்டிய ரூபியோ, மேற்கு அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளின் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதில் ரிலையன்ஸுடன் நெருக்கமாகச் செயல்பட விரும்புவதாகத் தெரிவித்தார்.


ரஷ்ய எண்ணெய் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தாலும், உலகச் சந்தையில் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே அமெரிக்காவின் தற்போதைய முக்கிய முன்னுரிமையாக உள்ளது. ஜாம்நகரிலிருந்து ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்குப் பெருமளவில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால், இந்த ஆலையின் தொடர்ச்சியான இயக்கம் சர்வதேச விநியோகச் சங்கிலிக்கு அவசியமாகிறது.


இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு உயர்ந்துள்ளதுடன், அமெரிக்காவின் டெக்சாஸ் சுத்திகரிப்புத் திட்டத்திலும் ரிலையன்ஸ் கைகோர்த்துள்ளது. புவிசார் அரசியல் சூழலில், ரஷ்யா மற்றும் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தி, உலகச் சந்தையில் எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ரிலையன்ஸின் சுத்திகரிப்புத் திறன் அமெரிக்காவுக்குத் தவிர்க்க முடியாத பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
Microtek invests over Rs 400 cr to accelerate solar business growth
அடுத்த செய்தி
Govt needs to incentivise domestic solar production

தொடர்புடைய செய்திகள்