Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் - மோடி

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் - மோடி

சுவாமி சின்மயானந்தாவின் சிந்தனைகளை நான் எப்போதும் முன்னெடுத்து வருகிறேன்.

பகிரவும் WhatsApp Facebook

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ‘சின்மயா அமிர்த மஹோத்சவ’ மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய சவால்களும், சமூக தீமைகளும் உருவெடுத்துள்ளன. அவற்றுக்குத் தீர்வு காணும் பொறுப்பு அனைவரிடத்திலும் உள்ளது. நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும்.


 ஒவ்வொரு குடிமகனையும் சுயசார்பை நோக்கி வழிநடத்தி, 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் மாபெரும் இலக்குடன் மக்களை இணைக்க நாம் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
வேதாந்தம் மற்றும் பகவத் கீதையின் உயரிய தத்துவங்களை உலகெங்கும் கொண்டு சேர்த்த சுவாமி சின்மயானந்தாவின் சிந்தனைகளை நான் எப்போதும் முன்னெடுத்து வருகிறேன்.

 சின்மயா மிஷன் என்பது வெறும் நிறுவனம் அல்ல, அது ஒரு தூய சிந்தனை. 2047-ல் இந்தியா சுதந்திர நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் அதே வேளையில் சின்மயா மிஷனும் தனது 100-வது ஆண்டை எட்டும். இதனால் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் நாட்டின் குறிக்கோள்களும் இந்த அமைப்பின் குறிக்கோள்களும் ஒன்றாகவே பயணிக்க வேண்டும்.


எனது 25 ஆண்டுகால அரசுப் பணியில் இளைஞர்களின் நலனே கொள்கைகளின் மையமாகத் திகழ்ந்து வருகிறது. நமது புதிய கல்விக் கொள்கையானது இந்திய அறிவுசார் மரபு, தாய்மொழி வழிக் கல்வி மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. குறிப்பாக, சின்மயா அமைப்பின் இளைஞர்கள் நாடு முழுவதும் 40,000 கி.மீ தூரம் பயணம் செய்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் நமது பண்பாட்டுத் தூதுவர்களாகத் திகழ்வது நாட்டின் ஆன்மிக மறுமலர்ச்சியில் பொன்னான அத்தியாயம்.


கடந்த 12 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட 650-க்கும் மேற்பட்ட பழங்காலச் சிலைகள் மத்திய அரசால் மீட்கப்பட்டு நாட்டுக்கு திருப்பிக் கொண்டுவரப்பட்டுள்ளன. 1993-ம் ஆண்டு நானே நேரில் சென்று சுவாமி சின்மயானந்தாவைச் சந்தித்து, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய நாடாளுமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தேன். மாநாடு தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பாகவே சான் டியாகோவில் அவர் மறைந்தது எனக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
மக்களே ரெடியா? மதுரை-பெங்களூருக்கு கூடுதல் விமானம்
அடுத்த செய்தி
ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சை - மருத்துவர் சொல்வதென்ன.?

தொடர்புடைய செய்திகள்