Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.50,000 கோடி அரிசி வர்த்தகத்துக்கு ஒப்பந்தம் - விலை குறையுமா?

ரூ.50,000 கோடி அரிசி வர்த்தகத்துக்கு ஒப்பந்தம் - விலை குறையுமா?

அரிசி மாநாட்டில் (பிஐஆர்சி) சுமார் ரூ.50,000 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (ஐஆர்இஎஃப்) சார்பில் டெல்லியில் மூன்று நாட்கள் நடைபெற்ற பாரத் சர்வதேச அரிசி மாநாட்டில் (பிஐஆர்சி) சுமார் ரூ.50,000 கோடி மதிப்பிலான அரிசி ஏற்றுமதிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் பிரேம் கார்க் கூறியதாவது: டெல்லியில் 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் எதிர்பார்ப்புகளைத் தாண்டி ரூ.50,000 கோடி மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டு வர்த்தகர் சுமார் ஒரு லட்சம் டன் பாசுமதி அரிசியை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 


இந்த ஒப்பந்தத்தில் ஒரு டன் அரிசியின் விலை, சரக்கு, காப்பீடு மற்றும் சரக்குக் கட்டணம் (CIF) உட்பட சுமார் 1,200 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 12 கோடி அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில், குறிப்பாக ஈராக்கில் வரவேற்பு அதிகரித்துள்ளது. 

அங்கு பாசுமதி அரிசிக்குக் கணிசமான தேவை நீடிக்கிறது. கடந்த ஆண்டு 154 மில்லியன் டன்னாக இருந்த உற்பத்தி, இந்த ஆண்டு சுமார் 149 முதல் 150 மில்லியன் டன்னாக இருக்கும். எல் நினோ பருவநிலை மாற்றம் மற்றும் விநியோகத் தடைகள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக, சில அரிசி இறக்குமதி நாடுகள் கூடுதல் இருப்பைச் சேமித்து வைக்கத் தொடங்கிள்ளன. எனினும், இந்தக் கவலைகள் குறையும்போது விலையில் மாற்றம் ஏற்பட்டு, விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு கார்க் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அவசியமா? : சீமான்
அடுத்த செய்தி
Microtek invests over Rs 400 cr to accelerate solar business growth

தொடர்புடைய செய்திகள்