Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐடிபிஐ வங்கியின் நிதி வீழ்ச்சிக்கு காங்கிரஸே காரணம் - நிர்மலா சீதாராமன்

ஐடிபிஐ வங்கியின் நிதி வீழ்ச்சிக்கு காங்கிரஸே காரணம் - நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

பகிரவும் WhatsApp Facebook

ஐடிபிஐ வங்கியின் நிதி வீழ்ச்சிக்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே அடிப்படைக் காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை கனடாவைச் சேர்ந்த 'ஃபேர்பேக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்துக்கு ரூ.53,000 கோடிக்கு (5.5 பில்லியன் அமெரிக்க டாலர்) விற்பனை செய்வதற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, மத்திய அரசுக்குச் சொந்தமான 30.48 சதவீத பங்குகளும், எல்ஐசியிடம் உள்ள 30.24 சதவீத பங்குகளும் ஃபேர்பேக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட உள்ளன.


இந்நிலையில், லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் அதிகார வர்க்கத்தின் சொந்த நிறுவனங்கள்போல கையாளப்பட்டன. காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வீடியோகான், கிங்பிஷர், ஏபிஜி ஷிப்யார்ட், வின்சம் போன்ற நிறுவனங்களுக்கு முறையற்ற அரசியல் அழுத்தங்கள் மூலம் பல கோடி கடன்கள் வழங்கப்பட்டு, பின்னர் அவை வாராக்கடன்களாக மாறின.


இதனால் ஐடிபிஐ வங்கியை நிதி இழப்புக்கு தள்ளப்பட்டது. 1976-ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் சஞ்சய் காந்தியுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு கடன் விதிகளை தளர்த்த மறுத்த காரணத்துக்காக எஸ்பிஐ தலைவர் ஆர்.கே.தல்வார் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஐடிபிஐ வங்கிக்கு ரூ.25,000 கோடிக்கும் மேல் மறுமூலதன நிதி வழங்கி, வெளிப்படையான தொழில்முறை நிர்வாகத்தின் மூலம் அதனை மீட்டு அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார்படுத்தியுள்ளது.


பங்கு மறுசீரமைப்பு நடவடிக்கையில் அனைத்து சட்டப்பூர்வ விதிகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளன.தற்போது வங்கி ஊழியர்கள் எந்த அரசியல் அழுத்தமும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட்டு, சாமானிய மக்களுக்கு எளிதாகக் கடன்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றனர். ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் சொல்லி மன்னிப்பு கேட்டதுபோலவே, இந்த விவகாரத்திலும் அவரது குற்றச்சாட்டுகள் மக்களிடையே அம்பலமாகும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக நிர்ணயம்
அடுத்த செய்தி
சிரியாவில் வெள்ளப் பெருக்கு: 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

தொடர்புடைய செய்திகள்