Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஒருமுறை சார்ஜ் செஞ்சா போதும்.. 343 கி.மீ. செல்லும் இவி பைக்

ஒருமுறை சார்ஜ் செஞ்சா போதும்.. 343 கி.மீ. செல்லும் இவி பைக்

நவம்பரில் விநியோகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அல்ட்ராவயலெட் நிறுவனம் புதிய விஎக்ஸ்-100 தொழில்நுட்பத் தளத்தில் உருவாக்கப்பட்ட எக்ஸ்-47 வெனம் (X-47 Venom) மின்சார மோட்டார் சைக்கிளை ரூ.2.65 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியது. இதற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், நவம்பரில் விநியோகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 343 கி.மீ. வரை செல்லும். மணிக்கு அதிகபட்சம் 155 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும். 30 கிலோவாட் அல்லது 40 குதிரைத்திறன் மோட்டாரும், சக்கரத்தில் 550 நியூட்டன் மீட்டர் முறுக்குவிசையும் உள்ளன. 


நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான நாராயண் சுப்பிரமணியம் கூறும்போது, "வடிவமைப்பு, பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அதிக செயல்திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை உருவாக்க நிறுவனம் முயற்சிக்கிறது.


 அதிவேக மின்னேற்ற வசதி, ஏழு அங்குல தொடுதிரை, முன் மற்றும் பின் கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளது" என்றார்.

முந்தைய செய்தி
HC asks for police to take action against hookah services
அடுத்த செய்தி
Trump's tariffs hurt Americans, says Canadian PM Carney

தொடர்புடைய செய்திகள்