Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ZOHO ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை

ZOHO ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை

ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு

பகிரவும் WhatsApp Facebook

ஜோஹோ ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ள அசுர வேக வளர்ச்சி, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 


நிறுவனத்தின் உலகளாவிய தரவு மையங்களை நவீனப்படுத்துவதற்கும், புதிய ஏஐ  உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் சர்வர் செலவுகள் முன்னெப்போதையும் விட நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்த இக்கட்டான நிதிச் சூழலைச் சமாளிக்கும் பொருட்டு, நடப்பு ஆண்டில் ஊழியர்களுக்கான வழக்கமான ஊதிய உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்த திடீர் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், நிறுவனத்தின் எதிர்கால நலன் மற்றும் வேலைவாய்ப்பு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்தத் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. சந்தையில் நிலவும் கடும் போட்டியை எதிர்கொள்ள, ஜோஹோ தனது மார்க்கெட்டிங் பட்ஜெட்டையும் குறைத்துக் கொண்டுள்ளது. 

தற்போதைய மென்பொருள் சந்தை மிகவும் சவாலான சூழலை எதிர்கொண்ட போதிலும், மற்ற சர்வதேச நிறுவனங்களைப் போலப் பெரிய அளவிலான ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முழுமையாகத் தவிர்க்கவே இந்த மாற்று வழிமுறை கையாளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
ரிசர்வ் வங்கியின் நோக்கம் இதுதான் - நிர்மலா சீதாராமன் தகவல்
அடுத்த செய்தி
சமாதானப் புறாவை பறக்கவிடும் இபிஎஸ்: முடிவுக்கு வருமா அதிமுக உட்கட்சி மோதல்?

தொடர்புடைய செய்திகள்