Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

AI மூலம் கடைசி நிமிடத்தில் வினாத்தாள் தயாரிக்கலாம்

AI மூலம் கடைசி நிமிடத்தில் வினாத்தாள் தயாரிக்கலாம்

தேர்வு சீர்திருத்தக் குழு தலைவர் நந்தன் நிலேகனி பரிந்துரை

பகிரவும் WhatsApp Facebook

நாடு முழுவதும் தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுக்கும் வகையில், மிகப்பெரிய 'வினா வங்கி'யிலிருந்து தேர்வுக்கு சற்று முன்பு வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறையை அமல்படுத்தலாம் என்று தேர்வு சீர்திருத்தப் பணிக்குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி பரிந்துரைத்துள்ளார்.

ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் நேற்று பங்கேற்றுப் பேசிய அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
"வினாத்தாள்கள் முன்கூட்டியே தயாரிக்கப்படும் போது, அவற்றை சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதிக்கும் எண்ணம் சிலருக்கு ஏற்படுகிறது. 


இதைத் தீர்க்க, முதலில் ஒரு மிகப்பெரிய வினா வங்கியை நாம் உருவாக்க வேண்டும். அதிலிருந்து தேர்வு நடைபெறும் நாளின் கடைசி நிமிடத்தில், அந்த நாளுக்கான வினாத்தாளை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முன்கூட்டியே வினாத்தாள் கசிவதற்கான வாய்ப்பே இருக்காது.

 எனவே, அதை விற்றுப் பணம் சம்பாதிக்கும் முறைகேடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். இந்தத் திசையில்தான் நாம் சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார். தேர்வு நடைபெறும் நாளன்று புதிய வினாத்தாள்களை உடனுக்குடன் உருவாக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் கணினி அடிப்படையிலான தேர்வுகளாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 

இந்தியாவில் மாணவர்கள் கணினி மூலம் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தற்போது 1,50,000 தேர்வு மையங்கள் உள்ளன. எனினும், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த நெட்வொர்க்கை நாடு முழுவதும் மேலும் விரிவுபடுத்த வேண்டும்," என்று நந்தன் நிலேகனி தெரிவித்தார்.

முந்தைய செய்தி
சமாதானப் புறாவை பறக்கவிடும் இபிஎஸ்: முடிவுக்கு வருமா அதிமுக உட்கட்சி மோதல்?
அடுத்த செய்தி
‘தமிழ்நாடு பின்னலாடை வாரியம்’ அமைக்கும் திட்டம் எப்போது? எதிர்பார்ப்பில் தொழில்துறையினர்

தொடர்புடைய செய்திகள்