Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பழநி சண்முகநதியில் 500 கன அடி திறப்பு

பழநி சண்முகநதியில் 500 கன அடி திறப்பு

நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட சண்முகநதி ஆற்றில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

பழநி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாட்களுக்கு முன் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால், பழநி-கொடைக்கானல் சாலையில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 67 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், நீர்வளத்துறையினர் அணையின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், நீர் தேக்கத்தில் இருந்து ஆயக்குடி பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேபோல், சண்முகநதி ஆற்றிலும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட சண்முகநதி ஆற்றில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்தேக்கம் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முந்தைய செய்தி
ஆசிய விளையாட்டில் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வரவேற்பு
அடுத்த செய்தி
AI adoption surges among US small businesses

தொடர்புடைய செய்திகள்