Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கு தேசிய விருது

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கு தேசிய விருது

நிதி நிலைத்தன்மை, சேவைத் தரத்தை மேம்படுத்த எம்டிசி செய்து வரும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், இந்திய நகர்ப்புற போக்குவரத்து மாநாடு மற்றும் கண்காட்சி - 2026 ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடந்தது. இதில், நகரப் போக்குவரத்திற்கான மிகவும் சாத்தியமான நிதி ஏற்பாட்டைக் கொண்ட நகரம் என்ற பிரிவில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் இந்த விருதினை வழங்கினார். விருதை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், பெற்றுக்கொண்டார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்ய 755 மின்சாரப் பேருந்துகள் உள்பட சுமார் 4,100 பேருந்துகளை 687 வழித்தடங்களில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.

பொதுப் போக்குவரத்து சேவைகளின் நிதி நிலைத்தன்மை, சேவைத் தரத்தை மேம்படுத்த எம்டிசி செய்து வரும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தில் எம்டிசியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

போக்குவரத்து சேவையை வழங்கும் போது ஏற்படும் வருவாய்க்கும், செலவிற்கும் இடையிலான வித்தியாசத் தொகையை ஈடுசெய்ய, தமிழ்நாடு அரசால் 'நிதி இடைவெளி நிரப்பு நிதி' வழங்கப்படுகிறது. இந்த நிதியானது வெறும் மானியமாக வழங்கப்படாமல், பேருந்துகளின் செயல்திறன் குறியீடுகள் அளவிடப்பட்டு வழங்கப்படுகிறது.

முந்தைய செய்தி
ஆப்பிள் இந்தியா வருவாயில் புதிய சாதனை
அடுத்த செய்தி
ரயில் நிலையங்களில் 'ஸ்மார்ட்' குப்பைத் தொட்டிகள்

தொடர்புடைய செய்திகள்