Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்

இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

அம்பாசமுத்திரம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன். என்னை பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகின்றனர்? எல்லா சாதிக்குமான பொது வேட்பாளர் நான். சொந்த பந்தம் என்று பார்த்தால் நான் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியாது. உறவுகள் வேறு, அரசியல் நிலைப்பாடுகள் என்பது வேறு. நான் எப்போதுமே பொது வேட்பாளர்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த சட்டசபை தேர்தலில் காரைக்குடியில் போட்டியிட்ட சீமான், அங்கு தோல்வியைச் சந்தித்தார். சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதனால் காலியாக உள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

முந்தைய செய்தி
ரூ.200-க்கு மளிகைத் தொகுப்பு - தமிழகத்தில் இன்று தொடக்கம்
அடுத்த செய்தி
திருப்பூரில் வர்த்தக வாய்ப்பு கலந்துரையாடல்

தொடர்புடைய செய்திகள்