Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டு வாய்ப்பு அதிகரிப்பு - HSBC

இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டு வாய்ப்பு அதிகரிப்பு - HSBC

இந்தியச் சந்தை மீண்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய பங்குச் சந்தையில் நிறுவனப் பங்குகளின் மதிப்பீடுகள் குறைந்துள்ளதால், முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஹெச்எஸ்பிசி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைப் பங்குகள் சிறந்த வாய்ப்புகளை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.

நிஃப்டி 50 குறியீட்டின் எதிர்கால வருவாய் அடிப்படையிலான பங்கு விலை–வருவாய் விகிதம் 16 மடங்காகக் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே இந்த அளவை எட்டியுள்ளது. இதனால் இந்தியச் சந்தை மீண்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


நடப்பு 2026-27 நிதியாண்டில் நிறுவனங்களின் லாப வளர்ச்சி 11 முதல் 12 சதவீதமாக இருக்கும் என ஹெச்எஸ்பிசி கணித்துள்ளது. எனினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் அதிகரிப்பு ஆகியவை முதலீட்டுக்குத் தடையாக உள்ளன.


தனியார் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பாதுகாப்புத் துறை, துறைமுகங்கள், மின்னணு உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன.


இதற்கிடையே, செப்டம்பரில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. எல் நினோ தாக்கத்தால் கிராமப்புற நுகர்வு பாதிக்கப்படலாம் என்றும் ஹெச்எஸ்பிசி எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி
நெசவாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்: நிலுவைத் தொகை ரூ.13 கோடியை விடுவித்த தமிழக அரசு
அடுத்த செய்தி
Shoppers Stop ரூ.3.11 கோடி லாபம் - கடனற்ற நிறுவனமாக மாற இலக்கு

தொடர்புடைய செய்திகள்