Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இரண்டாவது நாளாக சந்தைகள் வீழ்ச்சி

இரண்டாவது நாளாக சந்தைகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையின் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீடு 143.21 புள்ளிகள் (0.19 சதவீதம்) குறைந்து 73,709.69 புள்ளிகளில் நிலைபெற்றது.

பகிரவும் WhatsApp Facebook

வங்கி, நிதி மற்றும் மின்துறைப் பங்குகளில் விற்பனை அதிகரித்ததாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 143 புள்ளிகளை இழந்தது.

அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கு விற்பனையும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தைக் குறைத்தன.

மும்பை பங்குச் சந்தையின் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீடு 143.21 புள்ளிகள் (0.19 சதவீதம்) குறைந்து 73,709.69 புள்ளிகளில் நிலைபெற்றது. தொடக்கத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமான இந்தக் குறியீடு, 829.29 புள்ளிகள் உயர்ந்து 74,682.19 புள்ளிகளைத் தொட்டது. பின்னர் லாபத்தை இழந்து, வர்த்தகத்தின்போது 73,229.45 புள்ளிகள் வரை சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 77.60 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 22,811.35 புள்ளிகளில் முடிவடைந்தது. வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக 23,120.90 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 22,702.85 புள்ளிகளையும் தொட்டது.

பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், டிரெண்ட், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, மாருதி சுசுகி, இண்டிகோ, கோட்டக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவை உயர்ந்தன.

உயர்ந்த கச்சா எண்ணெய் விலையும், அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனையும் இந்திய–அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கையைப் பின்னுக்குத் தள்ளியதாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆய்வுத் தலைவர் வினோத் நாயர் தெரிவித்தார்.

வாகனம், நிதி, உலோகம், ரியல் எஸ்டேட் துறைகளில் லாபப் பதிவு அதிகரித்தது. தகவல் தொழில்நுட்பப் பங்குகள் தாக்குப்பிடித்தன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.23 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 111 அமெரிக்க டாலரைக் கடந்தது. ஆசியச் சந்தைகள் கலவையான முடிவுகளைப் பதிவு செய்தன. ஐரோப்பியச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாயின.

திங்கள்கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,148.64 கோடிக்குப் பங்குகளை விற்றனர். உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,201.19 கோடிக்குப் பங்குகளை வாங்கினர்.

இதற்கிடையே, ரூ.30,213 கோடி மதிப்பிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதல் நாளிலேயே மூன்று மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

வலுவான இரண்டாம் காலாண்டு நிறுவன முடிவுகளும் உள்நாட்டு முதலீட்டு வரத்தும் சந்தைக்கு ஆதரவாக இருப்பதாக நாயர் கூறினார். எனினும், அந்நிய முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான விற்பனை எச்சரிக்கையைக் கோருவதாகவும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம், நிறுவனங்களின் லாப வளர்ச்சி, கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய பத்திர வருவாயின் போக்கு ஆகியவை அடுத்தகட்ட சந்தை நகர்வை நிர்ணயிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
ETERNAL நிகர லாபம் 2 மடங்காக உயர்வு
அடுத்த செய்தி
குறைந்த விலையில் வர்த்தகமாகும் என்எம்டிசி ஸ்டீல், சன்ஃபிளாக்

தொடர்புடைய செய்திகள்