Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு - ரூ.1.55 லட்சம் கோடி சரிவு

8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு - ரூ.1.55 லட்சம் கோடி சரிவு

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 1,605.44 புள்ளிகள் (2.15%) சரிந்தது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால், நாட்டின் மதிப்புமிக்க முதல் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு, கடந்த வாரம் ரூ.1.55 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதில் ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்தன.

கடந்த வாரத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது, பணவீக்கம், நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் தொடர்பான அச்சம் உள்ளிட்ட காரணங்களால், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 1,605.44 புள்ளிகள் (2.15%) சரிந்தது. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 546.15 புள்ளிகள் (2.36%) சரிவை கண்டது. இதன் எதிரொலியாக, பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு, நான்கு வர்த்தக தினங்களில் ரூ.20.78 லட்சம் கோடி குறைந்து ரூ.4,51,83,393 கோடியாகச் சரிந்தது. அக்டோபர் 16-ம் தேதி இது ரூ.4,72,62,167 கோடியாக இருந்தது.


அதிக மதிப்புமிக்க முதல் 10 நிறுவனங்களில் , அதிகபட்சமாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.55,506.95 கோடி குறைந்து ரூ.10,67,121.12 கோடியாக உள்ளது. கடந்த வாரத்தில் இந்நிறுவனப் பங்குகள் 5 சதவீதம் சரிந்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.34,180.51 கோடி குறைந்து ரூ.5,77,146.21 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.27,065.08 கோடி குறைந்து ரூ.16,10,372.11 கோடியாகவும் சரிந்தது.


எல்ஐசி சந்தை மதிப்பு ரூ.21,062.24 கோடி குறைந்து ரூ.4,81,142.58 கோடியாக உள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.9,360.75 கோடி குறைந்து ரூ.11,79,454.70 கோடியாகவும், எஸ்பிஐ சந்தை மதிப்பு ரூ.4,338.46 கோடி குறைந்து ரூ.8,83,384.38 கோடியாகவும் உள்ளது.


இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,881.38 கோடியும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.1,276.53 கோடியும் குறைந்தன. இதற்கு மாறாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.23,517.56 கோடி அதிகரித்து ரூ.9,14,652.52 கோடியாகவும், கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி சந்தை மதிப்பு ரூ.1,788.66 கோடி அதிகரித்து ரூ.5,01,513.72 கோடியாக இருந்தது.


இந்திய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, எல்ஐசி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

நிறுவனம்                                        மதிப்பு(ரூ.கோடியில்)
ஹெச்டிஎஃப்சி வங்கி                               55,506.95
பஜாஜ் ஃபைனான்ஸ்                                34,180.51
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்                  27,065.08
எல்ஐசி                                                         21,062.24
பார்தி ஏர்டெல்                                            9,360.75
எஸ்பிஐ                                                         4,338.46
இன்ஃபோசிஸ்                                            2,881.38
ஐசிஐசிஐ வங்கி                                         1,276.53
டிசிஎஸ்                                                    23,517.56 (+)
எல் அண்ட் டி                                          1,788.66 (+)

முந்தைய செய்தி
ஓய்வூதிய கோரிக்கைகளுக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்
அடுத்த செய்தி
Rice companies eye UK, European markets

தொடர்புடைய செய்திகள்