Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

5.55% அதிகரிப்பு: ரூ.20,700 கோடியாக உயர்ந்தது ஹெச்டிஎஃப்சி வங்கி லாபம்

5.55% அதிகரிப்பு: ரூ.20,700 கோடியாக உயர்ந்தது ஹெச்டிஎஃப்சி வங்கி லாபம்

தனிப்பட்ட நிகர லாபம் 4.7 சதவீதம் உயர்ந்து ரூ.19,510 கோடியை எட்டியது.

பகிரவும் WhatsApp Facebook

ஹெச்டிஎஃப்சி வங்கியின் செப்டம்பர் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.55 சதவீதம் அதிகரித்து ரூ.20,700 கோடியானது. 

கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.19,611 கோடியாக இருந்தது. தனிப்பட்ட நிகர லாபம் 4.7 சதவீதம் உயர்ந்து ரூ.19,510 கோடியை எட்டியது. மொத்த வருவாய் ரூ.97,258 கோடியாகவும், செலவினம் ரூ.67,774 கோடியாகவும் அதிகரித்தன. மொத்த வாராக்கடன் விகிதம் 1.24 சதவீதத்திலிருந்து 1.11 சதவீதமாகக் குறைந்தது. 

மூலதனப் போதுமான விகிதம் 18.9 சதவீதமாக இருந்தது. கருவூலச் செயல்பாடுகளைத் தவிர்த்த வரிக்குப் பிந்தைய லாபம் 12.6 சதவீதம் வளர்ந்தது. ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,500 கோடியிலிருந்து ரூ.3,573.62 கோடியாக சற்று உயர்ந்தது என்று வங்கி தெரிவித்துள்ளது.



முந்தைய செய்தி
22.28 சதவீதம் அதிகரிப்பு: ஐசிஐசிஐ வங்கி லாபம் ரூ.16,333 கோடி
அடுத்த செய்தி
எதிர்பார்ப்பை கிளப்பிய ஜியோ ஐபிஓ: கிடைக்குமா 20 சதவீத தொடக்க லாபம்?

தொடர்புடைய செய்திகள்