Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின்னணு வடிவில் தங்க வர்த்தகம்: BSE உடன் MMTC-PAMP ஒப்பந்தம்

மின்னணு வடிவில் தங்க வர்த்தகம்: BSE உடன் MMTC-PAMP ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின்படி, பல்வேறு எடைகளில் தங்க ரசீதுகளை வர்த்தகம் செய்வதற்கான வசதிகளை பிஎஸ்இ மேம்படுத்தும்.

பகிரவும் WhatsApp Facebook

தங்கத்தை மின்னணு வடிவில் வாங்கவும் விற்கவும் உதவும் வர்த்தகத்தை விரிவுபடுத்த, பிஎஸ்இ பங்குச் சந்தையும் எம்எம்டிசி-பேம்ப் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்தியாவில் மின்னணு தங்க ரசீதுகள் பயன்பாட்டை அதிகரிப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இதற்காக, முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இரு நிறுவனங்களும் மேற்கொள்ள உள்ளன.

மின்னணு தங்க ரசீது என்பது பாதுகாப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள உண்மையான தங்கத்துக்கான மின்னணு ஆவணமாகும். இது செபியின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. முதலீட்டாளர்கள் இத்தகைய ரசீதுகளைத் தங்களது டீமேட் கணக்கில் வைத்திருந்து, பங்குகளைப் போல வாங்கவும் விற்கவும் முடியும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, பல்வேறு எடைகளில் தங்க ரசீதுகளை வர்த்தகம் செய்வதற்கான வசதிகளை பிஎஸ்இ மேம்படுத்தும். மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு, நேரடி தங்கத்தை மின்னணு ரசீதுகளாகவும், ரசீதுகளை மீண்டும் தங்கமாகவும் மாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்தும். தங்கத்தின் தரத்தைச் சோதித்தல், சுத்திகரித்தல் உள்ளிட்ட பணிகளில் எம்எம்டிசி-பேம்ப் நிறுவனம் தனது அனுபவத்தைப் பயன்படுத்தும்.

இந்த முயற்சி தங்க வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, முதலீட்டாளர்கள் எளிதாக வர்த்தகம் செய்ய உதவும் என்று பிஎஸ்இ நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தியும், எம்எம்டிசி-பேம்ப் நிர்வாக இயக்குநர் சமித் குஹாவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மின்னணு தங்க ரசீது வர்த்தகத்தை முதலில் அறிமுகப்படுத்திய பங்குச் சந்தை பிஎஸ்இ ஆகும். தற்போது 100 மில்லிகிராம், 1 கிராம், 10 கிராம் ஆகிய அளவுகளில் தங்க ரசீதுகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

முந்தைய செய்தி
As US and China form AI blocs, countries increasingly torn between them
அடுத்த செய்தி
பிரான்ஸில் தீவிரமடையும் கடன் நெருக்கடி

தொடர்புடைய செய்திகள்