Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Dark Web-ல் கசிந்த வாடிக்கையாளர் தகவல்கள்: SBI

Dark Web-ல் கசிந்த வாடிக்கையாளர் தகவல்கள்: SBI

இந்த சம்பவத்தால் வங்கியின் முக்கியச் செயல்பாடுகள், நிதிநிலை, தொழில் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் 3,897 பேரின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் வெளியாகியிருக்கலாம் என நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பங்குச் சந்தைக்கு எஸ்பிஐ அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டார்க் வெப் எனப்பவது சாதாரண கூகுள் போன்ற சர்ச் இன்ஜின்களில் கண்டுபிடிக்க முடியாத, இணையத்தின் மறைவான ஒரு பகுதியாகும். இந்த டார்க் வெப்பில், கிடைத்த சுமார் 3.75 லட்சம் பதிவுகளை முதல்கட்டமாக ஆய்வு செய்ததில், 3,897 பதிவுகளில் தனிப்பட்ட அடையாள தகவல்கள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் மற்றும் வீட்டு முகவரி, வங்கிக் கிளை விவரங்கள், வாடிக்கையாளர் அடையாள எண் (சிஐஎஃப்), கடன் விண்ணப்பங்கள் தொடர்பான பதிவுகள் உள்ளிட்ட தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கலாம்.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி, எங்களது அச்சுறுத்தல் கண்காணிப்பு சேவை நிறுவனம், பாதுகாப்பு சைபர் ஏஜென்சி மற்றும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (சிஇஆர்டி-இன்) ஆகியவற்றிடமிருந்து இது தொடர்பான எச்சரிக்கைகள் கிடைத்தன.

இதையடுத்து, சைபர் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு அங்கீகரித்துள்ள சுயாதீன சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கசிந்ததாகக் கூறப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை, அவற்றின் மூலாதாரம், பாதிப்பின் அளவு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

எனினும், இந்த சம்பவத்தால் வங்கியின் முக்கியச் செயல்பாடுகள், நிதிநிலை, தொழில் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை. வங்கிச் சேவைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் தாமதமின்றித் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இணைய சுதந்திர அறக்கட்டளை (ஐஎஃப்எஃப்) வலியுறுத்தியுள்ளது.

எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதார் உள்ளிட்ட முக்கியமான வாடிக்கையாளர் அடையாள ஆவணங்கள் கசிந்துள்ளனவா?, தகவல்கள் எவ்வாறு அணுகப்பட்டன என்பன குறித்து வங்கி தெளிவுபடுத்த வேண்டும். இதற்கென தனி உதவி எண்ணை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

முந்தைய செய்தி
பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் - ரம்மியமான காட்சி!
அடுத்த செய்தி
வெளுத்து வாங்கப்போகும் கனமழை - 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தொடர்புடைய செய்திகள்