Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் சரிவு

அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் சரிவு

பைனான்ஸ் கிரிப்டோ நிறுவனத்தில் 630 கோடி டாலர் கிரிப்டோ சொத்துகள் திருடப்பட்டதாக வெளியான தகவலால், காயின்பேஸ் உள்ளிட்ட பங்குகள் 7.2–10.6 சதவீதம் வீழ்ந்தன.

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவுக்கான பிரம்மாண்ட முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தைத் தருமா என்ற அச்சத்தால், அமெரிக்கப் பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பப் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.

நாஸ்டாக் 747.73 புள்ளிகள் ( 2.86 சதவீதம்) வீழ்ந்து 25,437 புள்ளிகளில் முடிந்தது. ஜூன் 5-க்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ஒருநாள் சரிவு இதுவாகும். டவ் ஜோன்ஸ் 572.25 புள்ளிகள் குறைந்து 51,770.31 ஆகவும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 140.32 புள்ளிகள் சரிந்து 7,580.07 ஆகவும் நிறைவடைந்தன.

இன்டெல், அமேசான் காலாண்டு முடிவுகள் ஏமாற்றமளித்த நிலையில், இன்டெல் பங்குகள் 28.6 சதவீதம் சரிந்தன. ஏஎம்டி 10.9, என்விடியா 4.2, டெல் 10.8, ஹெச்பி 9.6 சதவீதம் வீழ்ந்தன. செமிகண்டக்டர் குறியீடு 7.2 சதவீதமும், அத்துறை நிதிகளான எஸ்ஓஎக்ஸ்எக்ஸ் 8.2, எஸ்எம்எச் 7 சதவீதமும் சரிந்தன.

பைனான்ஸ் கிரிப்டோ நிறுவனத்தில் 630 கோடி டாலர் கிரிப்டோ சொத்துகள் திருடப்பட்டதாக வெளியான தகவலால், காயின்பேஸ் உள்ளிட்ட பங்குகள் 7.2–10.6 சதவீதம் வீழ்ந்தன. அதிக லாபத்தால் எக்ஸான் மொபில், செவ்ரான் பங்குகள் முறையே 2.2, 2.8 சதவீதம் உயர்ந்தன.

முடிவுகளை வெளியிட்ட 299 நிறுவனங்களில் 82 சதவீதம் எதிர்பார்ப்பைவிட அதிக வருவாய் ஈட்டியும், ஏஐ அச்சம் நீடித்தது. அக்டோபரில் நாஸ்டாக், எஸ் அண்ட் பி சரிந்தபோதும், டவ் ஜோன்ஸ் உயர்ந்தது.

செமிகண்டக்டர் துறையின் சந்தை மதிப்பு சுமார் ரூ.95 லட்சம் கோடி குறைந்தது. ஐந்து முன்னணி நிறுவனங்களின் இழப்பு மட்டும் 61,000 கோடி டாலராகும். இன்டெல்லின் பலவீனமான லாபக் கணிப்பும், அமேசானின் 4,240 கோடி டாலர் பணப்புழக்கப் பற்றாக்குறையும் கவலையை அதிகரித்தன. ஆல்பபெட் முடிவுகளும் ஏமாற்றமளித்தன. அக்டோபரில் செமிகண்டக்டர் குறியீட்டின் இழப்பு 15 சதவீதத்தைத் தாண்டியது.

முந்தைய செய்தி
வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் 55% அதிகரிப்பு
அடுத்த செய்தி
நிதி திரட்டும் நடைமுறைகளை எளிமையாக்க செபி திட்டம்

தொடர்புடைய செய்திகள்