Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.28,000 கோடி முதலீடு செய்ய TATA பவர் திட்டம்

ரூ.28,000 கோடி முதலீடு செய்ய TATA பவர் திட்டம்

புதுப்பிக்கத்தக்க மின்திட்டங்களில் 3 ஜிகாவாட், மேற்கூரை சூரிய மின்திட்டங்களில் 2 ஜிகாவாட் திறனை கூடுதலாக நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் 2027–28 நிதியாண்டுக்குள் ரூ.28,000 கோடி முதலீடு செய்யும் திட்டம் தொடரும் என டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் பங்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘நடப்பு நிதியாண்டில் ரூ.13,000 கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ.15,000 கோடியும் முதலீடு செய்யப்பட உள்ளது. சூரிய, காற்றாலை மின்திட்டங்கள், மேற்கூரை சூரிய மின்சாரம் மற்றும் பேட்டரி மின்சேமிப்புத் திட்டங்களுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

2027 மார்ச் மாதத்துக்குள் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்திட்டங்களில் 3 ஜிகாவாட், மேற்கூரை சூரிய மின்திட்டங்களில் 2 ஜிகாவாட் திறனை கூடுதலாக நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிறுவனத்தின் மொத்த புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தித் திறன் 7.2 ஜிகாவாட்டாக உள்ளது. பேட்டரி மின்சேமிப்புத் திறனை 2 ஜிகாவாட் மணியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.17,000 கோடி வருவாய் ஈட்ட நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது,’’ என்றார்.


முந்தைய செய்தி
தமிழக முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் பொறுப்பேற்றார்
அடுத்த செய்தி
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 23% உயர்வு

தொடர்புடைய செய்திகள்