Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லாபம் 8.4% சரிவு

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லாபம் 8.4% சரிவு

மொத்த செலவுகள் ரூ.191 கோடியிலிருந்து 21 சதவீதம் அதிகரித்து ரூ.230 கோடியை எட்டின.

பகிரவும் WhatsApp Facebook

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 8.4 சதவீதம் சரிந்து ரூ.221 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.241.32 கோடியாக இருந்தது. 

செயல்பாட்டு வருவாய் 5 சதவீதம் உயர்ந்து ரூ.484 கோடியானது. மொத்த செலவுகள் ரூ.191 கோடியிலிருந்து 21 சதவீதம் அதிகரித்து ரூ.230 கோடியை எட்டின.

நிர்வாகத்தின் கீழுள்ள காலாண்டு சராசரி சொத்து மதிப்பு 4 சதவீதம் உயர்ந்து ரூ.4.42 லட்சம் கோடியாக இருந்தது. இத்தகவல்களை நிறுவனம் பங்குச்சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளது. 


மும்பை பங்குச்சந்தையில் நேற்று நிறுவனப் பங்கு விலை 0.57 சதவீதம் குறைந்து ரூ.954.10 ஆக வர்த்தக முடிவில் நிலைபெற்றது. வருவாய் உயர்ந்தபோதிலும் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது.

முந்தைய செய்தி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு நுழைவுச் சீட்டு வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி?
அடுத்த செய்தி
ETERNAL நிகர லாபம் 2 மடங்காக உயர்வு

தொடர்புடைய செய்திகள்