Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆனந்த் ரதி நிகர லாபம் 50% அதிகரிப்பு

ஆனந்த் ரதி நிகர லாபம் 50% அதிகரிப்பு

நிதித் தயாரிப்புகள் விநியோக வருமானம் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கை ஆகியவை வருவாய் உயர்வுக்கு உதவின.

பகிரவும் WhatsApp Facebook

ஆனந்த் ரதி ஷேர் அண்ட் ஸ்டாக் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் உயர்ந்து ரூ.41.93 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.27.9 கோடியாக இருந்தது.

செயல்பாட்டு வருவாய் 20.25 சதவீதம் அதிகரித்து ரூ.273.21 கோடியானது. கடந்த ஆண்டு இது ரூ.227.2 கோடியாக இருந்தது. 


கடனுதவியுடன் பங்கு வர்த்தகம் மேற்கொள்ளும் வசதியின் வளர்ச்சி, நிதித் தயாரிப்புகள் விநியோக வருமானம் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கை ஆகியவை வருவாய் உயர்வுக்கு உதவின.

சந்தை ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியிலும் நிறுவனம் இந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக காலாண்டு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ஏற்றம் கண்ட வேதாந்தா குழும பங்குகள்
அடுத்த செய்தி
லீலா பேலசஸ் நிகர லாபம் 26.6% உயர்வு

தொடர்புடைய செய்திகள்