Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜியோ ஐபிஓவில் பங்குகளை வாங்க ரூ.2.5 லட்சம் கோடிக்கு விண்ணப்பித்த ஆங்கர் முதலீட்டாளர்கள்

ஜியோ ஐபிஓவில் பங்குகளை வாங்க ரூ.2.5 லட்சம் கோடிக்கு விண்ணப்பித்த ஆங்கர் முதலீட்டாளர்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், தனது பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முன்னதாக, 212 ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 7.24 கோடி பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ரூ.8,110 கோடி மதிப்பிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு, ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்தியப் பங்குச் சந்தையில் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முன்பாக ஒரு நிறுவனத்தின் ஆங்கர் பங்கு ஒதுக்கீட்டுப் பிரிவில் இத்தகைய அதிக தேவை ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், தனது பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முன்னதாக, 212 ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 7.24 கோடி பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.1,119 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.8,109.85 கோடி திரட்டப்பட்டுள்ளது.
ஆங்கர் முதலீட்டாளர்கள் என்பது பொதுப் பங்கு வெளியீடு பொதுமக்களுக்குத் தொடங்குவதற்கு முன்பாகவே பங்குகளைப் பெறும் பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் ஆவர். இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகளின் மதிப்பைக் காட்டிலும் 30 மடங்குக்கும் அதிகமான முதலீட்டு விருப்பங்கள் கிடைத்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஆங்கர் முதலீட்டாளர் பட்டியலில் சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூர் அரசு, அபுதாபி முதலீட்டு ஆணையம், நார்வேயின் மத்திய வங்கி சார்ந்த முதலீட்டு மேலாண்மை அமைப்பான நார்ஜஸ் வங்கி முதலீட்டு மேலாண்மை நிறுவனம் உள்ளிட்ட முக்கிய அரசு மற்றும் அரசு ஆதரவு முதலீட்டு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்களான பிஎன்பி பரிபாஸ் ஃபைனான்சியல் மார்க்கெட்ஸ், சிட்டிகுரூப் குளோபல் மார்க்கெட்ஸ், சொசைட்டி ஜெனரல் மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் ஐரோப்பா ஆகியவையும் பங்கேற்றுள்ளன.

பிளாக்ராக் குளோபல் ஃபண்ட்ஸ், ஜேபி மோர்கன், அலையன்ஸ் குளோபல் இன்வெஸ்டர்ஸ், ஃபிடெலிட்டி, ஷ்ரோடர்ஸ், நியூ வேர்ல்டு ஃபண்ட், ரெட்வீல், ஈஸ்ட்ஸ்பிரிங், ப்ரூடென்ஷியல் ஹாங்காங், மோர்கன் ஸ்டான்லி இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்ஸ், டி. ரோ பிரைஸ் நியூ ஏஷியா உள்ளிட்ட சர்வதேச முதலீட்டு நிறுவனங்களும் பங்குகளைப் பெற்றுள்ளன.
உள்நாட்டைச் சேர்ந்த பரஸ்பர நிதி நிறுவனங்களும் ஜியோ பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன. மொத்தம் 25 சொத்து மேலாண்மை நிறுவனங்கள், தங்களது 95 பரஸ்பர நிதித் திட்டங்கள் வாயிலாக இந்த முதலீட்டில் பங்கேற்றுள்ளன.

எஸ்பிஐ பரஸ்பர நிதி, ஹெச்டிஎஃப்சி பரஸ்பர நிதி, ஐசிஐசிஐ புருடென்ஷியல் பரஸ்பர நிதி, ஆதித்யா பிர்லா சன் லைஃப் பரஸ்பர நிதி, கோட்டக் பரஸ்பர நிதி, ஒயிட்ஓக் கேபிடல், நிப்பான் இந்தியா பரஸ்பர நிதி, ஆக்சிஸ் பரஸ்பர நிதி, பந்தன் பரஸ்பர நிதி ஆகியவை இதில் அடங்கும்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு (எல்ஐசி) ரூ.500 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி லைஃப், எஸ்பிஐ லைஃப், ஆக்சிஸ் மேக்ஸ் லைஃப், பஜாஜ் லைஃப், ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப், கனரா எச்எஸ்பிசி லைஃப், கோட்டக் லைஃப் மற்றும் இண்டஸ்இண்ட் நிப்பான் லைஃப் உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களும் பங்குகளைப் பெற்றுள்ளன.

மேலும், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் யூடிஐ ஆகியவற்றுடன் தொடர்புடைய ஓய்வூதிய நிதி அமைப்புகளுக்கும் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இன்று (அக். 21) தொடங்கி, 23-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் சுமார் ரூ.30,213 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக அமையக்கூடிய இந்தப் பங்கு வெளியீட்டில், நிறுவன முதலீட்டாளர்களிடம் கிடைத்துள்ள அதிக வரவேற்பு கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், பொதுமக்களிடையிலான முதலீட்டு வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்பது பங்கு வெளியீடு தொடங்கிய பிறகே தெரியவரும்.

முந்தைய செய்தி
HFCL லாபம் 448% உயர்வு
அடுத்த செய்தி
அல்ட்ராடெக் சிமென்ட் லாபம் 21% உயர்வு

தொடர்புடைய செய்திகள்