Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு புதிய தலைவர்

ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு புதிய தலைவர்
பணீந்திர ரெட்டி

புதிய நியமனத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA ) முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 14-ல் தமிழக ஆளுநர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை 6 மாத காலத்திற்கு கலைத்து உத்தரவிட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் தற்காலிக நிர்வாகம் நடந்து வந்தது. 

இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி, வீட்டு வசதி துறைச் செயலர் மற்றும் சட்டத்துறைச் செயலர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு பரிந்துரைத்த பெயர்களின் அடிப்படையில், புதிய நியமனத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அரசாணையை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக ரீட்டா ஹரிஷ் தக்கர், மைதிலி கே ராஜேந்திரன், கிருபாகரன் மதுரம், சத்தியமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து தற்போதைய தற்காலிக நிர்வாகம் செயலிழக்கும் என்றும், புதிய குழுவின் சம்பளம் மற்றும் பணி விதிமுறைகள் ஒழுங்குமுறை ஆணைய விதிகள்படி இருக்கும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாக ஒழுங்குமுறை ஆணையம் கலைக்கப்பட்டதால், வீடு வாங்கியவர்கள் பில்டர்கள் மீது கொடுத்த புகார்கள் மீது தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



முந்தைய செய்தி
மியாட் மருத்துவமனையில் உலக விபத்து காய தினம் அனுசரிப்பு
அடுத்த செய்தி
வரியில்லா சர்க்கரை இறக்குமதிக்கு காலக்கெடு நீட்டிப்பு

தொடர்புடைய செய்திகள்