Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

செயற்கைகோள் தொலைத்தொடர்பு சேவை: 4 ஐரோப்பிய நிறுவனங்கள் கூட்டணி

செயற்கைகோள் தொலைத்தொடர்பு சேவை: 4 ஐரோப்பிய நிறுவனங்கள் கூட்டணி

இந்த நான்கு நிறுவனங்களும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதிலோ, செயற்கைக்கோள் கூட்டமைப்பை அமைப்பதிலோ நேரடியாக முதலீடு செய்யத் திட்டமிடவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

ஐரோப்பாவில் செயற்கைக்கோள் வழியாக நேரடியாக செல்போன்களுக்குத் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கூட்டாகப் போட்டியிட, டாய்ச் டெலிகாம், ஆரஞ்சு, டெலிஃபோனிகா, வோடஃபோன் ஆகிய 4 நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்காக நான்கு நிறுவனங்களும் விருப்பக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஐரோப்பாவில் தொலைத்தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதும், தொலைதூரப் பகுதிகளுக்கும் சேவையை விரிவுபடுத்துவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும். இந்தத் திட்டத்தின்படி, செல்போன்கள் செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைந்து செயல்படும் சேவையை (D2D) வழங்க முடியும். இதன் மூலம் வழக்கமான செல்போன் கோபுரங்களின் இணைப்பு கிடைக்காத பகுதிகளிலும் தொலைத்தொடர்பு சேவையைப் பெற வாய்ப்பு ஏற்படும்.
மேலும், அவசர காலங்களில் தகவல் தொடர்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்கு நிறுவனங்களும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதிலோ, செயற்கைக்கோள் கூட்டமைப்பை அமைப்பதிலோ நேரடியாக முதலீடு செய்யத் திட்டமிடவில்லை. இதற்கான செயற்கைக்கோள் சேவை கூட்டாளி பின்னர் தேர்வு செய்யப்படுவார். தரைவழி கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன.
இந்த முயற்சி, ஐரோப்பாவின் தொலைத்தொடர்பு துறையில் போட்டியை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முந்தைய செய்தி
Watch and learn from Japan CASIO
அடுத்த செய்தி
Rising fuel costs fuel unrest, boost far-right across Europ

தொடர்புடைய செய்திகள்