Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஹெச்டி ஃபயர் புரொடெக்ட் ஐபிஓ

ஹெச்டி ஃபயர் புரொடெக்ட் ஐபிஓ

முதல் நாளில் 4.62 மடங்கு விண்ணப்பம்

பகிரவும் WhatsApp Facebook

தீயணைப்புக் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான ஹெச்டி ஃபயர் புரொடெக்ட்டின் ரூ.712 கோடி மதிப்பிலான முதன்மைப் பங்கு வெளியீட்டுக்கு, செவ்வாய்க்கிழமை முதல் நாளில் 4.62 மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்தன.

என்எஸ்இ தரவுகளின்படி, விற்பனைக்கு ஒதுக்கப்பட்ட 1,84,20,492 பங்குகளுக்கு எதிராக 8,50,40,395 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 11.38 மடங்கும், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 3.78 மடங்கும், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 1.04 மடங்கும் விண்ணப்பங்கள் பதிவாகின.


இந்நிறுவனம் திங்கள்கிழமை முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.213.11 கோடி திரட்டியது. அக்டோபர் 15-ம் தேதி நிறைவடையும் வெளியீட்டில், பங்கு ஒன்றின் விலை ரூ.258–271 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நிறுவன ஊக்குவிப்பாளர்களான ஹரிஷ் நர்ஷி தரம்ஷி, குசும் ஹரிஷ் தரம்ஷி ஆகியோரின் 2.63 கோடி பங்குகளை விற்பனை செய்யும் வெளியீடாக இது அமைந்துள்ளது. எனவே, வெளியீட்டுத் தொகை நிறுவனத்துக்குக் கிடைக்காது.


மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம், நீர், நுரை, வாயு அடிப்படையிலான தீயணைப்புச் சாதனங்களைத் தயாரிக்கிறது. மகாராஷ்டிரத்தில் இரண்டு உற்பத்தி ஆலைகள் உள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டடம், ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்துக்குச் சாதனங்களை வழங்கியுள்ளது.


இதன் பங்குகள் அக்டோபர் 21-ம் தேதி பிஎஸ்இ, என்எஸ்இ சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெளியீட்டு விலையில் நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.4,750 கோடியாகும். எண்ணெய், எரிவாயு, மின்சாரம், மருந்து, விண்வெளி, தரவு மையங்கள் மற்றும் கிடங்குத் துறைகளுக்கும் நிறுவனம் சேவையாற்றுகிறது.

முந்தைய செய்தி
சென்செக்ஸ் 1,109 புள்ளிகள் உயர்வு
அடுத்த செய்தி
இன்றைய வர்த்தகத்தில் கவனிக்க வேண்டிய பங்குகள்

தொடர்புடைய செய்திகள்