Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

TVS, Eicher பங்குகளுக்கு Jefferies முன்னுரிமை

TVS, Eicher பங்குகளுக்கு Jefferies முன்னுரிமை

அடுத்த இடத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பண்டிகைக் காலத்தில் இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், டிவிஎஸ் மோட்டார், ஐஷர் மோட்டார்ஸ் பங்குகளை வாங்க ஜெஃபரீஸ் பரிந்துரைத்துள்ளது. அடுத்த இடத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளது.

ஜெஃப்ரீஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, அக்டோபர் 11 முதல் 17 வரையிலான பண்டிகைக்காலத்தின் முதல் ஏழு நாட்களில் இருசக்கர வாகனப் பதிவுகள், முந்தைய ஆண்டின் ஒப்பீட்டுக் காலத்தைவிட 23 சதவீதம் அதிகரித்தன. பயணிகள் வாகனப் பதிவுகள் 7 சதவீதம் உயர்ந்தன.


டிவிஎஸ் மோட்டார் பங்கின் இலக்கு விலை ரூ.5,425, ஐஷர் மோட்டார்ஸ் ரூ.9,300, மகிந்திரா அண்ட் மகிந்திரா ரூ.4,000 என ஜெஃபரீஸின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிராக்டர் பதிவுகள் 28 சதவீதமும், நடுத்தர மற்றும் கனரக லாரிப் பதிவுகள் சுமார் 101 சதவீதமும் உயர்ந்துள்ளன.

 எனினும், லாரிப் பதிவுகளின் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டின் குறைந்த அடித்தளமும் காரணமாகும். பலவீனமான பருவமழை, உயர்ந்த ஒப்பீட்டு அடித்தளம் காரணமாக நிதியாண்டின் இரண்டாம் பாதியில் டிராக்டர் தேவை பாதிக்கப்படலாம் என்றும் ஜெஃபரீஸ் எச்சரித்துள்ளது. 

இருசக்கர வாகனத் தேவை நீடித்துச் சரிவதும், எதிர்பார்த்த லாபவிகிதம் கிடைக்காததும் முக்கிய அபாயங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி
சவுதி அரேபியா மீதான தாக்குதல் எதிரொலி: உலகப் பொருளாதாரத்துக்கு புதிய ஆபத்து
அடுத்த செய்தி
நிலக்கரி இறக்குமதி திட்டத்தை நிறுத்திய இந்தியா

தொடர்புடைய செய்திகள்