Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஓலா எலெக்ட்ரிக் பங்குகளை ‘விற்க’ பரிந்துரைத்த கோல்ட்மேன் சாக்ஸ்

ஓலா எலெக்ட்ரிக் பங்குகளை ‘விற்க’ பரிந்துரைத்த கோல்ட்மேன் சாக்ஸ்

பெரும் முதலீட்டுத் தேவைகள் நிறுவனத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனப் பங்குகளுக்கான மதிப்பீட்டை கோல்ட்மேன் சாக்ஸ் ‘நடுநிலை’ என்பதிலிருந்து ‘விற்க’ எனக் குறைத்ததையடுத்து, நேற்றைய வர்த்தகத்தில் பங்கு விலை சரிந்தது. இலக்கு விலையும் ரூ.23 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு ரூ.39.28 ஆக இருந்த இலக்கு விலையைக் குறைத்துள்ள கோல்ட்மேன் சாக்ஸ், நிறுவனத்தின் பணப்புழக்கம், நிதித் தேவை மற்றும் சந்தைப் பங்கு குறித்து கவலை தெரிவித்துள்ளது. அதிக வட்டிச் செலவு, பேட்டரி செல் உற்பத்தி மற்றும் மின்சார இருசக்கர வாகனத் தொழிலுக்கான பெரும் முதலீட்டுத் தேவைகள் நிறுவனத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளது.


தற்போதைய சந்தைப் பங்கு நிலையில் செயல்பாட்டு நஷ்டம் நீடிக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது. இதனால், 2027 முதல் 2029 வரையிலான நிதியாண்டுகளுக்கான வருவாய் மதிப்பீடுகளை அதிகபட்சம் 10 சதவீதம் குறைத்துள்ளது.


பேட்டரி செல் பிரிவின் தலைவர் அண்மையில் வெளியேறியதும், செயல்பாட்டுச் சவால்களை அதிகரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள் வழியிலான விற்பனை மற்றும் சேவை விரிவாக்கம், வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்வு, லாபத்திறன் மேம்பாடு ஆகியவை நிறுவனத்தின் மீட்சிக்கு முக்கியமாக இருக்கும்.


இந்தச் சூழலில், நிறுவனத்தைக் கண்காணிக்கும் எட்டு ஆய்வாளர்களில் ஏழு பேர் ‘விற்க’ என்றும், ஒருவர் ‘வைத்திருக்க’ என்றும் பரிந்துரைத்துள்ளனர். யாரும் ‘வாங்க’ பரிந்துரைக்கவில்லை. நிறுவனத்தின் ரூ.1,000 கோடி உரிமைப் பங்கு வெளியீடு, பங்கு ஒன்றுக்கு ரூ.27 என்ற விலையில் அக்டோபர் 30-ம் தேதி நிறைவடைகிறது.
பிஎஸ்இ சந்தையில் நேற்று (அக். 23) ஓலா எலக்ட்ரிக் பங்கு விலை 6.39% சரிந்து ரூ.29.90-ல் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

முந்தைய செய்தி
அதானி பவர் லாபம் 142% அதிகரிப்பு
அடுத்த செய்தி
இன்ஃபோசிஸ் நிகர லாபம் 6.2% உயர்வு

தொடர்புடைய செய்திகள்