Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

லாபம் அதிகரிப்பால் PC ஜுவல்லர் பங்கு 9% உயர்வு

லாபம் அதிகரிப்பால் PC ஜுவல்லர் பங்கு 9% உயர்வு

இந்தப் பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு சுமார் ரூ.101 கோடியாகும்.

பகிரவும் WhatsApp Facebook

இரண்டாம் காலாண்டு நிதிநிலை முடிவுகளில் லாபம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பிசி ஜுவல்லர் நிறுவனப் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சுமார் 9% உயர்ந்தன. ஆதித்ய குமார் ஹல்வாசியாவின் மொத்தப் பங்கு கொள்முதலும் கவனம் பெற்றுள்ளது.

2026–27 நிதியாண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டைவிட 58% அதிகரித்துள்ளது. வருவாய் 27.8% உயர்ந்து ரூ.1,054 கோடியை எட்டியுள்ளது.


கியூபிட் நிறுவனத் தலைவர் ஆதித்ய குமார் ஹல்வாசியா, நேற்று முன்தினம் பிசி ஜுவல்லரின் 5.51 கோடி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு சராசரியாக ரூ.18.39 என்ற விலையில் வாங்கியுள்ளார். இந்தப் பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு சுமார் ரூ.101 கோடியாகும்.


இதனிடையே, 14 வங்கிகளுக்கும் செலுத்த வேண்டிய நிலுவைகளை முன்கூட்டியே அடைத்து, வங்கிக் கடனற்ற நிலையை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஏற்றுமதி நிலுவைத் தொகைகளை மீட்டுள்ள நிறுவனம், 100 புதிய நகைக் காட்சியகங்கள் வரை திறக்கத் திட்டமிட்டுள்ளது. கடன் திருப்பிச் செலுத்துதல், வருவாய் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவை நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடுகளில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

முந்தைய செய்தி
10 நிறுவனங்களில் பங்கு இருப்பை உயர்த்திய பரஸ்பர நிதிகள்
அடுத்த செய்தி
சென்செக்ஸ் 460 புள்ளிகள் சரிவு

தொடர்புடைய செய்திகள்