Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.20,000 கோடி வருவாயை எட்ட எஸ்எல்எம்ஜி இலக்கு

ரூ.20,000 கோடி வருவாயை எட்ட எஸ்எல்எம்ஜி இலக்கு

ரூ.15,000 கோடிக்கும் அதிகமான வருவாயை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கோகோ கோலா நிறுவனத்தின் இந்தியாவின் மிகப்பெரிய பாட்டிலிங் நிறுவனமான எஸ்எல்எம்ஜி பானங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி வருவாயை எட்டவும், அதற்கு முன்பாகப் பங்குச் சந்தையில் பட்டியலிடவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.


இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் பரிதோஷ் லதானி கூறுகையில், தற்போது சுமார் ரூ.9,000 கோடியாக உள்ள மொத்த வருவாய், அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.15,000 கோடிக்கும் அதிகமான வருவாயை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி சுமார் 25 சதவீதமாக இருந்ததாகவும், கடந்த 4 ஆண்டுகளில் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் விரிவாக்கப் பணிகளுக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.5,000 கோடி முதலீட்டை அடுத்த 3 ஆண்டுகளில் தாண்டும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. பீகாரின் பக்சாரில் உள்ள ஆலையில் சுமார் ரூ.1,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய ஆலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மத்திய மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்திலும் புதிய பாட்டிலிங் ஆலைகளை அமைக்க நிலம் வாங்கப்பட்டுள்ளது.

தற்போது நிமிடத்துக்கு 35,000 பாட்டில்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 10,000 பாட்டில்கள் உற்பத்தித் திறனைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நிமிடத்துக்கு ஒரு லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்யும் திறனை எட்டவும் இலக்கு வைத்துள்ளது.

விநியோகத்தை மேம்படுத்தவும், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பொருள்களின் கிடைப்பை அதிகரிக்கவும் குளிரூட்டும் உபகரணங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. கடந்த ஆண்டு இதற்காக ரூ.60–ரூ.70 கோடி முதலீடு செய்துள்ளது. சில்லறை விற்பனையாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும் சேர்த்தால், இத்தகைய உபகரணங்களுக்கான மொத்த முதலீடு ரூ.100 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய செய்தி
’கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’
அடுத்த செய்தி
Rope car snag halts service at Palani temple

தொடர்புடைய செய்திகள்