Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

16 சதவீதம் சரிந்த ஸ்விக்கி பங்குகள் - முதலீட்டாளர்கள் கவலை

16 சதவீதம் சரிந்த ஸ்விக்கி பங்குகள் - முதலீட்டாளர்கள் கவலை

முந்தைய காலாண்டின் ரூ.791 கோடியுடன் ஒப்பிடும்போது இழப்பு 16.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

உணவு மற்றும் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான ஸ்விக்கியின் காலாண்டு முடிவுகளில், வருவாய் உயர்ந்தபோதும் எதிர்பார்த்ததைவிட அதிகமான நிகர இழப்பு பதிவானது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2026–27 நிதியாண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.922 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.1,092 கோடி இழப்பைவிட இது 15.6 சதவீதம் குறைவு. எனினும், முந்தைய காலாண்டின் ரூ.791 கோடியுடன் ஒப்பிடும்போது இழப்பு 16.6 சதவீதம் அதிகரித்துள்ளது.


நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 36.1 சதவீதம் உயர்ந்து ரூ.7,571 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.5,561 கோடியாகவும், முந்தைய காலாண்டில் ரூ.6,812 கோடியாகவும் இருந்தது. செயல்பாட்டு வருவாய் சந்தை மதிப்பீட்டைத் தாண்டியபோதும், நிகர இழப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது.


உணவு விநியோகப் பிரிவின் மொத்த ஆர்டர் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 17.7 சதவீதம் உயர்ந்து ரூ.10,054 கோடியை எட்டியுள்ளது. இப்பிரிவின் சரிசெய்யப்பட்ட EBITDA எனப்படும் வட்டி, வரி, தேய்மானம் உள்ளிட்டவற்றுக்கு முந்தைய லாபம் ரூ.341 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த ஆர்டர் மதிப்பின் அடிப்படையிலான அதன் லாப விகிதம், இதுவரையிலான உச்சமான 3.4 சதவீதத்தை எட்டியுள்ளது.


அதேநேரத்தில், உடனடி மளிகை விநியோகப் பிரிவான இன்ஸ்டாமார்ட்டில் இழப்பு தொடர்கிறது. அதன் மொத்த ஆர்டர் மதிப்பு முந்தைய காலாண்டைவிட 16.7 சதவீதம் உயர்ந்து ரூ.9,230 கோடியை எட்டியபோதும், சரிசெய்யப்பட்ட EBITDA இழப்பு ரூ.895 கோடியாகப் பதிவாகியுள்ளது.


உணவு விநியோகப் பிரிவின் லாபத்திறன் மேம்பட்டுள்ள நிலையில், இன்ஸ்டாமார்ட்டின் தொடரும் இழப்பும், நிறுவனத்தின் மொத்த நிகர இழப்பு முந்தைய காலாண்டைவிட அதிகரித்ததும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நேற்றைய வர்த்தக முடிவில், என்எஸ்இ-யில் ஸ்விக்கி பங்கு ரூ.35.40 (16.75 சதவீதம்) சரிந்து ரூ.176-ஆக நிலைபெற்றது.

முந்தைய செய்தி
வாட்ஸ்அப் பங்கு டிப்ஸை நம்ப வேண்டாம்
அடுத்த செய்தி
அமெரிக்க பங்குகளில் முதலீடு - ஏஞ்சல் ஒன் செயலியில் புதிய வசதி

தொடர்புடைய செய்திகள்