Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டெக் மஹிந்திரா சந்தை மதிப்பு ரூ.13,670 கோடி அதிகரிப்பு

டெக் மஹிந்திரா சந்தை மதிப்பு ரூ.13,670 கோடி அதிகரிப்பு

வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக ரூ.1,797-ஐ தொட்டது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் 32.74 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்கு விலை நேற்று 8 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது.

பிஎஸ்இ சந்தையில் டெக் மஹிந்திரா பங்கு 8.45 சதவீதம் உயர்ந்து ரூ.1,788-ல் முடிவடைந்தது. வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக ரூ.1,797-ஐ தொட்டது. என்எஸ்இ சந்தையில் 8.48 சதவீதம் உயர்ந்து ரூ.1,790-ல் நிலைபெற்றது.


இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.13,670.29 கோடி அதிகரித்து ரூ.1,75,252.44 கோடியாக உயர்ந்தது. சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளில் அதிக லாபம் ஈட்டிய பங்காக டெக் மஹிந்திரா முதலிடம் பிடித்தது.


செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,585.6 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ.1,194.5 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருவாய் 15.6 சதவீதம் அதிகரித்து ரூ.16,180.2 கோடியானது.


மேலும், நிறுவனத்தின் 40-வது ஆண்டு நிறைவையொட்டி, பங்குதாரர்களுக்கு 1:1 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, ஒரு பங்குக்கு ஒரு இலவச பங்கு வழங்கப்படும். டிசம்பர் 15-க்குள் போனஸ் பங்குகள் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஐடி பங்குகளின் எழுச்சியால் பிஎஸ்இ ஐடி குறியீடு 3.38 சதவீதம் உயர்ந்தது.

முந்தைய செய்தி
77,457 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி
அடுத்த செய்தி
விப்ரோ சந்தை மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடி

தொடர்புடைய செய்திகள்