Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அடுத்த ஆண்டில் வரவிருக்கும் மின் பற்றாக்குறை: தமிழக அரசின் பக்கா ப்ளான்!

அடுத்த ஆண்டில் வரவிருக்கும் மின் பற்றாக்குறை: தமிழக அரசின் பக்கா ப்ளான்!

இந்த பற்றாக்குறையைச் சமாளிக்க, முன்கூட்டியே மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாட்டில் 2027-ம் ஆண்டு கோடைக்காலத்தில் 7,971 மெகாவாட் வரை மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், தடையில்லா மின் விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் நீண்ட, நடுத்தர மற்றும் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் எதிர்வரும் 2027-ம் ஆண்டில் மாநிலத்தின் உச்சபட்ச மின்தேவை 23,672 மெகாவாட்டை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜூலை 14 அன்று அதிகபட்சமாக 21,724 மெகாவாட் மின்தேவை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.வரவிருக்கும் கோடைக்கால மின்பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் நடத்திய உள்மதிப்பீட்டில் 3,610 முதல் 6,568 மெகாவாட் வரையிலும், 'மெர்காடோஸ்' என்ற சுயாதீன அமைப்பு நடத்திய ஆய்வில் 4,834 முதல் 7,971 மெகாவாட் வரையிலும் மின்பற்றாக்குறை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பற்றாக்குறையைச் சமாளிக்க, முன்கூட்டியே மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான மாதங்களுக்கு, 24 மணி நேரமும் மற்றும் உச்ச நேர தேவைக்காகவும் குறுகிய கால டெண்டர் கோர தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தற்போதுள்ள மின் கட்டமைப்புகள் மூலம் 80 சதவீத தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. மீதமுள்ள தேவையைப் பூர்த்தி செய்யப் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அதில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சகட்ட தேவையைச் சமாளிக்க தலா 3,200 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேலும், மின் மாற்று அல்லது வங்கி மூலம் 500 மெகாவாட், நடுத்தர கால ஒப்பந்தங்களில் 1,500 மெகாவாட்டும் நீண்ட கால ஒப்பந்தங்களில் சுமார் 1,500 மெகாவாட்டும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிக மின்தேவை இருக்கும் நேரங்களில், வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது நம்பகத்தன்மையற்றது. சில நேரங்களில் ஒரு யூனிட் மின்சாரம் 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலை உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டாலும் சந்தையில் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே இந்த முன்கூட்டிய கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மின் கொள்முதலுக்கான டெண்டர்கள் மத்திய அரசின் 'டீப் ' இணையதளம் மூலம் கோரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
Touch screen Dress-ஆ? - அசத்தும் சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள்
அடுத்த செய்தி
Brazil reviews US-Paraguay deal on Itaipu energy

தொடர்புடைய செய்திகள்