Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏற்றுமதியை 72 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு: அமைச்சர் கீர்த்தனா

ஏற்றுமதியை 72 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு: அமைச்சர் கீர்த்தனா
சென்னையில் நடைபெற்ற ஏற்றுமதி கருத்தரங்கில் பேசினார் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா.

இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தை இந்தியாவின் முதன்மையான ஏற்றுமதி மாவட்டமாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தின் சரக்கு ஏற்றுமதியை, நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் 72 பில்லியன் டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறினார்.

சென்னையில் முதலீடு வழிகாட்டி அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் சார்பில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் கீர்த்தனா மற்றும் மத்திய அரசு அதிகாரிகள், தொழில் துறையினர் பங்கேற்றனர். தமிழகத்தின் தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்வதில் மத்திய, மாநில அரசுகளும் இணைந்து செயல்பட இதில் உறுதி எடுத்துகொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது: இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை முழுமையாகப் பயன்படுத்தி தமிழக தொழில் துறையின் சர்வதேசப் போட்டித் திறனை அதிகரிக்க வேண்டும். முதல்வர் விஜய் தலைமையில், தமிழகத்தின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான லட்சியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2026–27 நிதியாண்டுக்குள் சரக்கு ஏற்றுமதியை 59 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 72 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஏற்றுமதி இலக்குகளை நிர்ணயிப்பது, சேவைகள் ஏற்றுமதிக்கு தனி இலக்கு நிர்ணயிப்பது, புதிதாக ஏற்றுமதியில் ஈடுபட விரும்புவோருக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள உள்ளது.

மேலும், ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொருட்களைப் பரிசோதிக்கும் மையங்களின் தரத்தை உயர்த்தவும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக தனிப்பிரிவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தை இந்தியாவின் முதன்மையான ஏற்றுமதி மாவட்டமாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்டோரின் ஏற்றுமதிப் பங்களிப்பை அதிகரித்து, ஏற்றுமதி அடித்தளத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முந்தைய செய்தி
ஜிசிசி மையங்களை ஈர்ப்பதில் பெங்களூருவை முந்தும் சென்னை
அடுத்த செய்தி
VFRYT தளத்தில் 50 மின்சார வாகனங்கள்

தொடர்புடைய செய்திகள்