Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆடிட்டர் தவறுக்காக விஜய்யை தண்டிக்க முடியுமா? நீதிபதி கேள்வி

ஆடிட்டர் தவறுக்காக விஜய்யை தண்டிக்க முடியுமா? நீதிபதி கேள்வி

ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜய்யின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா?

பகிரவும் WhatsApp Facebook

ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய்யை தண்டிக்க முடியுமா என்று உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய்க்கு எதிராக வாக்காளர் தினேஷ் என்பவர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்து வருகிறார்.


விஜய் தரப்பில் வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த தினேஷ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, வேட்புமனுவில் தவறான தகவல் அளிக்கவோ, தகவலை மறைக்கவோ கூடாது; ஆனால், முதல்வர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.


அப்போது நீதிபதி, "சொத்துகளை குறைத்துக் காட்டியதற்காக தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா? உச்ச நட்சத்திரமான விஜய் ரூ.600 கோடிக்கு சொத்துக் கணக்கை காட்டியுள்ள நிலையில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை தெரிவிக்கவில்லை என்றால், அது எப்படி அவருடைய தேர்தல் வெற்றியை பாதிக்கும்? 

கோடீஸ்வரரிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது என்று கேட்டால், அவருக்கு எப்படித் தெரியும்? ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜய்யின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா?" என கேள்வி எழுப்பினார். மேலும், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.

முந்தைய செய்தி
டைட்டன் பங்கை வாங்க கிரீன் சிக்னல்!
அடுத்த செய்தி
தங்கம் விலை நிலவரம் - சவரன் எவ்வளவு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்