Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உக்ரைனுக்கு ஓகே சொன்ன ஜப்பான்! கோழி இறைச்சி, முட்டைகளுக்கு அனுமதி

உக்ரைனுக்கு ஓகே சொன்ன ஜப்பான்! கோழி இறைச்சி, முட்டைகளுக்கு அனுமதி

இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

உக்ரைனில் இருந்து கோழி இறைச்சி, முட்டைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டு காலத் தடையை ஜப்பான் நீக்கியுள்ளது. இதன்மூலம், உக்ரைன் உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் ஜப்பானியச் சந்தையில் தங்களது பொருள்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜப்பானுக்கான உக்ரைன் தூதர் யூரி லுடோவினோவ் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 19-ம் தேதி ஜப்பானின் வேளாண்மை, வனத்துறை மற்றும் மீன்வள அமைச்சக அதிகாரி எய்ஜி தனகாவைச் சந்தித்த அவர், தடையை நீக்கியதற்காக ஜப்பான் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
உக்ரைனில் கோழிப் பண்ணைகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, 2021 அக்டோபரில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தற்போது உக்ரைனில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு, அந்நாட்டின் கால்நடை சுகாதார நிலைமை குறித்து உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தடையை நீக்குவதாக ஜப்பானின் வேளாண்மை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜப்பானியச் சந்தையில் உக்ரைன் வேளாண் பொருள்களுக்கான அணுகலை விரிவுபடுத்த இரு நாடுகளும் தொடர்ந்து ஒத்துழைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உக்ரைனிலிருந்து சரக்குகள் எப்போது ஜப்பானைச் சென்றடையும் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ரஷ்யாவின் போர் காரணமாக உக்ரைனுக்கு ஜப்பான் நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் நிலையில், இந்த வர்த்தக முடிவு இருதரப்பு உறவுகளில் மற்றொரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி
பாரஸ் ஹெல்த்கேர் ரூ.652.5 கோடி திரட்டல்
அடுத்த செய்தி
`ஏ.ஐ. பயன்படுத்திக்கோங்க! ஆனால் தவறுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு’ - ஊழியர்களுக்கு செக்!

தொடர்புடைய செய்திகள்