Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாஸ்மாக் பார் டெண்டர் எடுக்கப்போறீங்களா? - புதிய விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க!

டாஸ்மாக் பார் டெண்டர் எடுக்கப்போறீங்களா? - புதிய விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க!

வேலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பழக்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிகளில் பார் அனுமதி வழங்கப்படாது.

பகிரவும் WhatsApp Facebook

டாஸ்மாக் பார்களில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை கூடாது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில், பார் நடத்தும் அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. சட்டப்பேரவைத் தேர்தலால் ஜூன் மாதம் வரை அனுமதி நீட்டிக்கப்பட்ட நிலையில், தவெக அரசு அமைந்ததும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் டிசம்பர் மாதம் வரை பார் நடத்தும் அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பார்களுக்கான அனுமதி வழங்கும் விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அதில் கூறியுள்ளதாவது:
டாஸ்மாக் பார் நடத்தும் உரிமம் டெண்டர் மூலம் வழங்கப்படும். மதுபானக்கடையில் இருந்து 100 மீட்டருக்குள் பார் அமைந்து இருக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் கோயில், பள்ளி, கல்லூரிகளில் இருந்து 50 மீட்டர் தள்ளியும், மற்ற இடங்களில் 100 மீட்டர் தள்ளியும் இருக்க வேண்டும்.

வேலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பழக்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிகளில் பார் அனுமதி வழங்கப்படாது.

மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பார் இயக்க அனுமதி வழங்கப்படும். குடிநீர் வழங்குவதோடு, சுத்தமாக பராமரிக்க வேண்டும். 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது. பணியில் அமர்த்தவும் கூடாது. ஒவ்வொரு பாரிலும் விழிப்புணர்வு வாசகத்துடன் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும்.

கலால்துறை ஆய்வாளர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் எப்போது வேண்டுமானாலும் டாஸ்மாக் பாரினை ஆய்வு செய்யலாம். விதிமீறல் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
சென்னையில் 20 மெகாவாட் திறனில் ஏஐ சூப்பர் கம்ப்யூட்டர் மையம் அமைப்பு!

தொடர்புடைய செய்திகள்