Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வெங்காய விலை உயர்வு - இதே நிலை தொடரும்?

வெங்காய விலை உயர்வு - இதே நிலை தொடரும்?

பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ.70 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

வெங்காயம் விலை கடந்த 3 மாதங்களாக உச்சத்தில் உள்ள நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்கு இதே நிலை தொடரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் வெங்காயம் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தில் உள்ளது. விலை எப்போது சரியும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி, எம்ஜிஆர் சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் என்.சின்னமாயன் கூறியதாவது:

 
காலநிலை மாற்றம், அதீத வெயில், தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக உயர் ரக வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது இரண்டாம், மூன்றாம் தர வெங்காயமே வருகிறது. 

தேவைக்கேற்ற வரத்து இல்லாத நிலையில் வெங்காயம் விலை கடந்த 3 மாதங்களாக உச்சத்தில் உள்ளது.
சாம்பார் வெங்காயம் (நாட்டு ரகம்) தரத்திற்கேற்ப ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.130 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ.70 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. 

ஒட்டு வெங்காயம் வரத்து இல்லை. மழைக்காலம் முடியும் வரை, அதாவது அடுத்த ஒரு மாதத்திற்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
Police collect details of senior citizens in Karur
அடுத்த செய்தி
Collector inspects monsoon preparedness in Nagapattinam

தொடர்புடைய செய்திகள்