Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் வறுமை

பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் வறுமை

இந்தியாவின் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான அரசு நலத் திட்டங்கள் ஆகியவை வறுமையைக் குறைக்க முதன்மை காரணமாக அமைந்துள்ளன

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் வறுமை மேலும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்களே ஒப்பீட்டு அறிக்கை வெளியிட்டு கவலை தெரிவித்துள்ளன.

உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 49.6 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, பாகிஸ்தான் ஊடகங்கள் இரு நாடுகளின் பொருளாதார நிலை குறித்து விரிவான ஒப்பீட்டுச் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அதில், இந்தியாவில் 2011 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தீவிர வறுமையின் சதவீதம் 27 சதவீதத்திலிருந்து வெறும் 2.6 சதவீதமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் வறுமை குறைவதற்குப் பதிலாக, தீவிர வறுமையின் அளவு 23 சதவீதமாக உயர்ந்து மக்களைக் கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தியாவின் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான அரசு நலத் திட்டங்கள் ஆகியவை வறுமையைக் குறைக்க முதன்மை காரணமாக அமைந்துள்ளன. அதேநேரத்தில், பாகிஸ்தானில் நிலவும் கடுமையான அரசியல் நிலையற்ற தன்மை, அத்தியாவசியப் பொருட்களின் விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கைகளே அங்கு வறுமை அதிகரித்தற்குக் காரணம் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முந்தைய செய்தி
North Korea tests cluster bomb warhead
அடுத்த செய்தி
சாவியை காருக்குள்ளேயே விட்டுச் சென்றதால் திருடுபோன மேட் ரிமாக்கின் புகாட்டி சிரோன் சொகுசு கார்

தொடர்புடைய செய்திகள்