Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சாவியை காருக்குள்ளேயே விட்டுச் சென்றதால் திருடுபோன மேட் ரிமாக்கின் புகாட்டி சிரோன் சொகுசு கார்

சாவியை காருக்குள்ளேயே விட்டுச் சென்றதால் திருடுபோன மேட் ரிமாக்கின் புகாட்டி சிரோன் சொகுசு கார்

தகவலறிந்த ஆஸ்திரியா காவல் துறையினர் அவரைக் கைது செய்து, காரை மீட்டனர்.

பகிரவும் WhatsApp Facebook

ஐரோப்பிய நாடான குரோஷியாவில் பாதுகாப்பு அதிகம் என்ற நம்பிக்கையில் சொகுசு காரின் சாவியை காரிலேயே போட்டுவிட்டுச் சென்ற புகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் (சிஇஓ) கார் திருடுபோன சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு மற்றும் அதிவேக கார்களை தயாரிக்கும் புகாட்டி நிறுவன சிஇஓ மேட் ரிமாக். இவர் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 28.5 கோடி ரூபாய்) மதிப்புள்ள 'புகாட்டி சிரோன்' ரக சொகுசு காரைப் பயன்படுத்தி வந்தார்.

குரோஷியாவில் குற்றச் சம்பவங்கள் மிகக் குறைவு என்பதாலும், அங்குள்ள சூழல் மிகவும் பாதுகாப்பானது என்பதாலும், மேட் ரிமாக் வழக்கமாக தனது காரின் சாவியை காரின் உள்ளேயே விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவரது நிறுவனத்தின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த காரை, அங்கு வேலை கேட்க வந்த உள்ளூர் நபர் ஒருவர் திருடி, குரோஷிய எல்லையைக் கடந்து ஆஸ்திரியா நாட்டுக்கே சென்றுவிட்டார்.

தகவலறிந்த ஆஸ்திரியா காவல் துறையினர் அவரைக் கைது செய்து, காரை மீட்டனர். இதுகுறித்துப் புகாட்டி சிஇஓ மேட் ரிமாக் கூறும்போது, "ஐரோப்பா பாதுகாப்பானது என்று கருதி, காரிலேயே சாவியை விட்டுச் சென்றது எனது தவறுதான். இனி ஒருபோதும் காரின் சாவியை உள்ளே வைக்க மாட்டேன்" என்றார்.

முந்தைய செய்தி
பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் வறுமை
அடுத்த செய்தி
சிக்கிமில் ரூ.3.75 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டங்கள்

தொடர்புடைய செய்திகள்