Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இணையவழி வெளிநாட்டு விற்பனை 6 ஆண்டுகளில் உச்சம்

இணையவழி வெளிநாட்டு விற்பனை 6 ஆண்டுகளில் உச்சம்

அழகுசாதனப் பொருட்களின் விற்பனை அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தென்கொரியாவின் இணையவழி வெளிநாட்டு விற்பனை, நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் முந்தைய ஆண்டைவிட 40.7 சதவீதம் அதிகரித்து, தென்கொரிய நாணயமான 1.09 லட்சம் கோடி வானை எட்டியுள்ளது. வரியில்லா அழகுசாதனப் பொருட்களின் விற்பனை அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

தென்கொரிய தரவு மற்றும் புள்ளிவிவர அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான விற்பனை மதிப்பு, 2020-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த மூன்றாம் காலாண்டு அளவாகும். அமெரிக்க டாலர் மதிப்பில் இது 81.05 கோடியாகும்.


இணையவழி வரியில்லா விற்பனை 90.5 சதவீதம் உயர்ந்து, 37,170 கோடி வானாகப் பதிவானது. இதில் அழகுசாதனப் பொருட்கள் மட்டும் 30,600 கோடி வான் பங்களிப்பை வழங்கின. இதன் மூலம், வரியில்லா விற்பனையின் பெரும்பகுதியை அழகுசாதனப் பொருட்கள் பெற்றுள்ளன.


ஒட்டுமொத்த நேரடி இணையவழி வெளிநாட்டு விற்பனையிலும் அழகுசாதனப் பொருட்களே முதலிடம் பிடித்தன. அவற்றின் விற்பனை மதிப்பு 63,630 கோடி வானாக இருந்தது. ஆடைகள் மற்றும் நாகரிகப் பொருட்கள் 9,230 கோடி வானுடன் அடுத்த இடத்தைப் பெற்றன. இசைப் பதிவுகள், காணொலிகள் மற்றும் இசைக்கருவிகளின் விற்பனை 8,440 கோடி வானாக இருந்தது.


இதற்கிடையே, வெளிநாடுகளிலிருந்து தென்கொரியர்கள் நேரடியாக இணையத்தில் வாங்கிய பொருட்களின் மதிப்பு, முந்தைய ஆண்டைவிட 6.3 சதவீதம் குறைந்து 1.99 லட்சம் கோடி வானாகச் சரிந்தது. இந்தக் கொள்முதல் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாகக் குறைந்துள்ளது.


மூன்றாம் காலாண்டின் தொடக்கப்பகுதி வரை நீடித்த அமெரிக்க டாலரின் வலிமையின் தாக்கமே இந்தச் சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குப் பொருட்களின் நேரடிக் கொள்முதல் இரட்டை இலக்கச் சதவீதத்தில் அதிகரித்தது. ஆனால், ஆடைகள், நாகரிகப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் கொள்முதல் இரட்டை இலக்கச் சதவீதத்தில் குறைந்தது.

 வெளிநாட்டு விற்பனை உயர்ந்த அதே காலகட்டத்தில், வெளிநாட்டுப் பொருட்களுக்கான இணையவழிக் கொள்முதல் சரிவடைந்துள்ளதை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இரு வர்த்தகப் பிரிவுகளிலும் மாறுபட்ட போக்கு இந்தக் காலாண்டில் பதிவாகியுள்ளது.

முந்தைய செய்தி
AI debt surge pushes Magnificent Seven borrowing to $578 bn
அடுத்த செய்தி
Free vaccination drive for stray dogs

தொடர்புடைய செய்திகள்