Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

4 வழித்தடங்களில் நமோ பாரத் ரயில் இயக்க திட்டம் - 4.5 கோடி பேர் பயணம்

4 வழித்தடங்களில் நமோ பாரத் ரயில் இயக்க திட்டம் - 4.5 கோடி பேர் பயணம்

பிரதமர் மோடியால் 82 கி.மீ. நீளமுள்ள டெல்லி–காசியாபாத்–மீரட் வழித்தடத்தில் முதல் நமோ பாரத் ரயில் இயக்கி வைக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

ஏசி பெட்டிகள், மெத்தை இருக்கைகள், சிசிடிவி கேமராக்கள், யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் பாயின்டுகள் போன்ற நவீன வசதிகள் கொண்ட நமோ பாரத் ரயில் இயக்கப்பட்டதன் 3-ம் ஆண்டு டெல்லியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், இணை அமைச்சர் தோக்கன் சாஹு பங்கேற்றனர்.

2023-ல் பிரதமர் மோடியால் 82 கி.மீ. நீளமுள்ள டெல்லி–காசியாபாத்–மீரட் வழித்தடத்தில் முதல் நமோ பாரத் ரயில் இயக்கி வைக்கப்பட்டது. முன்பதிவில்லாமல் ஏ.சி. பெட்டியில் பயணிக்கும் இந்த ரயிலில் இதுவரை 4.5 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மனோகர் லால், “மேம்பட்ட போக்குவரத்து, நகரங்களுக்கு இடையேயான தூரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், மக்களைப் புதிய வாய்ப்புகளுடன் இணைத்து, அதன் மூலம் பிராந்திய வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் நமோ ரயில் துரிதப்படுத்துகிறது. வேகமான, தொடர்ச்சியான மற்றும் நம்பகமான சேவைகளின் மூலம், நமோ பாரத் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.


பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொருளாதார மையங்களை எளிதில் சென்றடையும் பயணிகளுக்கு அதிக வசதியை வழங்குகிறது. டெல்லி-பானிபட்-கர்னால் மற்றும் டெல்லி-குருகிராம்-பெஹ்ரோர் ஆகிய நமோ பாரத் வழித்தடங்களுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. காசியாபாத்-ஜெவார் மற்றும் நொய்டா-ஃபரிதாபாத்-குர்கான் ஆகிய வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

முந்தைய செய்தி
Over 30 arrested at Dindigul protest
அடுத்த செய்தி
இந்த வாரம் பங்குச் சந்தை போக்கு எப்படி இருக்கும்?

தொடர்புடைய செய்திகள்