Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிக்கிமில் ரூ.3.75 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டங்கள்

சிக்கிமில் ரூ.3.75 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டங்கள்

மீன் உற்பத்தியாளர்களுக்கு கடன் அட்டைகளை வழங்குவதுடன், மீனவர்களுக்கான மாநில அரசின் நதி உதவித் திட்டத்தின்கீழ் காசோலைகளையும் வழங்குகிறார்.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், இன்றும் நாளையும், (நவ.2, 3) சிக்கிம் மாநிலத்தின் காங்டாக், மாங்கன் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, சிக்கிம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்கிறார். மேலும், இயற்கை மீன் வளர்ப்புக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையைத் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.3.75 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், மீன் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

மீன் உற்பத்தியாளர்களுக்கு கடன் அட்டைகளை வழங்குவதுடன், மீனவர்களுக்கான மாநில அரசின் நதி உதவித் திட்டத்தின்கீழ் காசோலைகளையும் வழங்குகிறார்.
மங்ஷிலாவில் மீன்வளத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினருடன் கலந்துரையாடுகிறார். மத்திய அமைச்சரின் இந்தப் பயணம், சிக்கிம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நவீன, நிலையான, சந்தை சார்ந்த மீன்வளச் சூழலமைப்பின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
சாவியை காருக்குள்ளேயே விட்டுச் சென்றதால் திருடுபோன மேட் ரிமாக்கின் புகாட்டி சிரோன் சொகுசு கார்

தொடர்புடைய செய்திகள்