Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புதிய ரூ.1,000 நோட்டு? - சமூக வலைத்தளங்களில் பரவும் போலி தகவல்

புதிய ரூ.1,000 நோட்டு? - சமூக வலைத்தளங்களில் பரவும் போலி தகவல்
சமூக வலைதளங்களில் வைரலாகும் பெரிய கோயில் கோபுரத்துடன் கூடிய ரூ.1,000 நோட்டு.

தஞ்சை பெரிய கோயில் கோபுரத்துடன் மஞ்சள் நிறத்தில் ரூ.1,000 நோட்டு இருப்பது போன்ற படங்கள், காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் புதிதாக ரூ.1,000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் போலியானது என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் கோபுரத்துடன் மஞ்சள் நிறத்தில் ரூ.1,000 நோட்டு இருப்பது போன்ற படங்கள், காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு அளித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

புதிய ரூ.1,000 நோட்டுகளை வெளியிடுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்த பின்னரே அவற்றைப் பகிர வேண்டும். 

தற்போது, ஆர்பிஐயின் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. புதிய ரூ.1,000 நோட்டு அறிமுகம் குறித்த தகவல்களுக்கு ஆர்பிஐயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

2016 நவ.8-கறுப்புப் பணம், கள்ள நோட்டு, ஊழலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. 2023 மே19 -இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

முந்தைய செய்தி
ரயில்களில் இரவில் செல்போன் சார்ஜ் செய்ய தடை
அடுத்த செய்தி
Oracle's Larry Ellison dismisses 'SaaS apocalypse' fears

தொடர்புடைய செய்திகள்